தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது பெரும் வேதனைத்தரும் விசயமாக உள்ளது பெரும்பாலும் இதில் குறிவைக்கப்பட்டு வாழ்வை இழப்பது மாணவிகள் தான் ஏன் என்றால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் இந்த வகையான பாலியல் துன்புறுத்தல்களில் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் காரணம் பள்ளி , கல்லூரி மாணவிகள் எளிதில் இதில் சிக்கிகொள்வதும் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகிகள் அலுவலர்கள் என பலரால் பாலியல் துண்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டும் அவர்கள் எதிர்கால வாழ்க்கை, பெண் வெளியே தெரிந்தால் சமூகத்தில் அவள் பெயர் பாதிக்கப்படும்,புகாரளித்தால் பத்திரிக்கைகளில் படம் வரும் என பல விதத்தில் பயமுறுத்தி பல மாணவிகள் வாழ்க்கை சீரழிக்கப்பட்டும் புகாரின்றி பல குற்றவாளிகள் வெளியில் ஹாயாக சுற்றி தவறை மேலும் தொடர்கின்றனர் இந்த வன்முறையில் தங்கள் பெண்ணின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு பல பெற்றோர் பயந்தே நொந்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கின்றனர்..
ஒரு மாணவியால் என்று தன் பெயர் தெரியாமல் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு புகார் தர முடியுமோ அன்று தான் அவளின் வாழ்வு பாதுகாக்கப்படும் என்பதை அறிந்து நெல்லை மாாவட்ட SP விக்கிரமன், தென்காசி ASP அரவிந்தன் ஆகியோர் புது முயற்சியை செங்கோட்டை மகளிர் பள்ளியில் இருந்து துவங்கினர் இதன் மூலம் அனைத்து மாணவிகளுக்கும் post கார்டு எஸ் பி தனி முகவரியுடன் வழங்கப்பட்டுள்ளது இதில் மாணவிகள் தங்கள் குறைகளை தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எழுதி அனுப்பினால் துரிதமாக விசாரணை , நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மேலும் இதில் தங்கள் பெயரை கூட குறிப்பிட அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்..
இந்த புதிய முயற்சியை செங்கோட்டை அரசு மகளிர் மேல்னிலைப்பள்ளியில் நேற்று SP VIKIRAMAN,ASP ARAVINDHAN ஆகியோர்ப்செயல் படுத்தி அனைத்து மாணவிகளுக்கும் காரிடுகளை வழங்கி விழிப்புணர்வு.உறையாற்றினர்...இது தமிழகம் முழு அளவில் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டால் மாணவிகள் மீதான வன்முறை குறைய வாய்ப்புள்ளது ..
அனைத்து தனியார் பள்ளிகளிலும் இதனை கட்டாயம் செயல் படுத்தினால் பல மாணவிகள் வாழ்க்கை பாதுகாக்கப்படும் , இந்த திட்டம் பெண்களை பெற்ற அனைத்து பெற்றோரின் வயிற்றிலும் பால் சுரக்கும் திட்டமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள்..
செயல்படுத்துவதில் உள்ள நடை முறை சிக்கல்கள் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை பொருத்தே இந்த திட்டத்தின் வெற்றி அமையும்....
இருந்தாலும் இந்த திட்டம் புது முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது வாழ்த்துக்களுடன்...
-மாணவிகள் சார்பில்
Thanks ; Tenkasi Times

No comments:
Post a Comment