Wednesday, July 15, 2015

கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் சாதி, வருமான சான்றிதழ்களை பெறுவதில் தள்ளு முள்ளு சப் கலெக்டர் வருகை..



கடையநல்லூரை சார்ந்த பொதுமக்கள் வருவாய் துறையின் சாதி, வருமானம், இருப்பிடம், குடும்பத்தின் முதல் பட்டதாரி மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம், ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் மின் கட்டணங்களை செலுத்துதல் ஆகிய சேவைகளுக்காக மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் அரசு பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இது போக கடையநல்லூர் தாலுகா விற்கு உட்பட்ட புளியங்குடி,பாம்புகோவில் சேந்தமரம்,சாம்பவர் வடகரை,ஆய்குடி,அச்சன்புதூர்,கடையநல்லூர் மூன்று இடம் மொத்தம்12இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டரவு அலுவலகளில் செயல்பட்டு வருகிறது.ஆனால் பள்ளிக்கூடங்களில் சிறுபாண்மை கல்வி உதவி தொகைபெற வருமான சான்றுகட்டாயம் ஆனதால் நேன்று (13-7-15)முதல் தாலுகா அலுவலகத்தில் தொடங்கப்பட்டது அதிகாலை முதல் நான் உட்பட நூற்றுக்கணக்கில் ஆண்களும் பெண்களும் இ சேவை மையத்தில் அதிகாலை 4மணி முதல் காத்து இருந்தும் 20 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் கிடைத்தது டோக்கன் கிடைக்காத பெண்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை சார்தவர் என்ற முறையில் என்னிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.


நாம் உடனடியாக சப்கலெக்டர் வெங்கடேஷை தொடர்புகொண்டு பிரச்சனைகளை சொன்னோம் உடனடியாக கடையநல்லூர் தாலுகா அலுவலகம் வந்த சப்கலெக்டர் 120நபர்களின் பெயர்களையும் பதிந்து விட்டு வரிசையாக தினசரி தலா40 நபர்கள் மட்டும் காலை9மணிக்கு வந்து வருமானம் சான்று பெற்று செல்ல உத்தரவிட்டார் இது போன்றே அனைத்து சேவை மையத்திலும் இவ்வாறே செயல்பட உத்ததரவுயிட்டார் காலையில் வந்து காத்து கிடப்பதை தவிர்கசொன்னார். 


எது எப்படி நடந்தாலும் கம்யூட்டர் வேகமாக செயல் படனும் அப்போதுதான் முடியும்.

தகவல் படம் குறிச்சிசுலைமான் .

No comments:

Post a Comment