Friday, July 17, 2015

வழக்கம் போல் பெருநாள் தொழுகை நடத்த மதுரை உயர்நீதி மன்றம் அனுமதி !!!


டையநல்லூரில் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சொந்தமான காயிதே மில்லத் திடலில் நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறுவது வழக்கம்.இந்த பெருநாள் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்தொடர்ந்து தொழுகை நடத்தி வந்தனர் இதற்கு முன்னர் அந்த அமைப்பின் மாநில நிர்வாகியாக செயல்பட்ட சைபுல்லா என்பவரை அந்த அமைப்பிலிருந்து ஊழல் குற்றச்சாட்டால் கடந்த சில ஆண்டிற்கு முன்னர் அந்த அமைப்பை விட்டு நீக்கியதை தொடர்ந்து காயிதே மில்லத் திடலில் யார் தொழுகை நடத்துவது என்பது பிரச்சணை எழுந்தது பின்பு காவல்துறை,தாசில்தார் கோட்டாச்சியர் அலுவலகம் வரை சென்று சமாதானம் கூட்டம் நடத்தி இதுவரை தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்கே தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது ஆனால் இந்த வருடம் நபிவழி முறையில் பெருநாள் தொழுகை நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மட்டுமே அனுமதிக்க கூடாது அனைத்து ஜமத்திற்கும் சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும் என முபாரக் சமாத்தின் நிர்வாகிகள் சைப்புல்லா , ஜபருல்லா ஆகியோர் சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இதை அவசர வழக்காக 16-7-15 அன்று விசாரித்த நீதிபதி வழக்கம் போல் அவர் அவர் இடத்தில் தொழுகை நடத்தி விட்டு வாருங்கள் அதன் பின்னர் 29தேதி மறுவிசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்குகிறேன் என்றார் இதன் அடிப்படையில் தென்காசி சப் கலெக்டர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காயிதே மில்லத் திடலில் தொழுகை நடத்த அனுமதி வழங்கினார் எனவே வழக்ககம் போல் காலை 6;30 மணிக்கு காயிதே மில்லத் திடலில் தொழுகை நடைபெறும்.

நன்றி ; குறிச்சி சுலைமான்

No comments:

Post a Comment