தமிழக அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். ஒன்றிய முன்னாள் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, துரைகனி மற்றும் ஒன்றிய பிரதிநிதி திருமலைச்சாமி, சாபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முதியோர், ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்ட உதவி தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். குலையநேரி, ஆனைகுளம் ஊராட்சி பகுதியை கடையநல்லூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அப்துல் காதர், மாநில சிறுபான்மை அணி துணை செயலாளர் ரசாக், செங்கோட்டை ஒன்றிய செயலர் ரவிசங்கர், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலர் வக்கீல் சிவபத்ம நாதன், தென்காசி நகர செயலர் சாகீர், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலர் சேர்மத்துரை, மாநில பேச்சாளர்கள் பரணி சேகர், இஸ்மாயில் மற்றும் 2000–க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கடையநல்லூர் நகர்மன்ற துணைத் தலைவர் ராசையா வரவேற்புரையாற்றினார். சிவராமபேட்டை பகவதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். திரிகூடபுரம் ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Thanks : Malaimalar
No comments:
Post a Comment