Saturday, July 26, 2014

குற்றாலம் சாரல் திருவிழா இன்று துவக்கம் ...

கலைநிகழ்ச்சிகளுடன்
குற்றாலம் சாரல் திருவிழா இன்று துவக்கம்



குற�றாலம் சாரல் திருவிழா இன்று (26ம் தேதி) கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெ றும் இவ்விழாவில் தினமும் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் அரசு சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டு சாரல் திருவிழா இன்று (26ம் தேதி) தொடங்கி ஒரு வாரம் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவிற்கு அமைச்சர் செந் தூர் பாண்டியன் தலைமை வகிக்கிறார். கலெக்டர் கருணாகரன் வரவேற்கிறார். சுற்றுலா துறை அமைச்சர் சண்முகநாதன் சாரல் விழா வை தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் சுற்றுலா ஆணையர் (பொறுப்பு) கண்ணன், முத்துக்கருப்பன் எம்பி, தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண் டியன் மற்றும் எம்பி எம்எல்ஏக்கள் பேசுகின்றனர். சுற் றுலா அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் நன்றி கூறுகிறார்.
விழாவில் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவின ரின் ஒயிலாட்டம், பரதநாட்டியம், பல்சுவை, இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா தொடர்ந்து ஒருவாரம் நடக்கிறது.
27ம் தேதி காலை 8 மணிக்கு நீச்சல் போட்டி, 28ம் தேதி மாலை 3 மணிக்கு நாய் கண்காட்சி, 29ம் தேதி காலை 10 மணிக்கு கோலப் போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி, 30ம் தேதி மதியம் 2 மணிக்கு சுற்றுச்சூழல் குறித்த ஓவியப் போட்டி, 31ம் தேதி காலை 10 மணிக்கு படகுபோட்டி, ஆக.1ம் தேதி மாலை 3 மணிக்கு ஆணழ கன் போட்டி என பல்வேறு போட்டிகள் சாரல் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படுகிறது. 27ம் தேதி முதல் மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது.
தினமும் நடன ந�கழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், தோல்பாவை கூத்து, பல்சுவை, மெல்லிசை நிகழ்ச்சிகள், மேஜிக்ஷோ உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடக்கிறது. ஆக.2ம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.

நன்றி : தினகரன்