நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷவ்வால் பிறை தென்பட்டதையடுத்து நான்கு இடங்களில் திடலில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி அதிகாலை 6 மணிமுதலே தொழுகை திடலே நோக்கி வரத் தொடங்கினர்.
சரியாக 6.30 மணியளவில் பெருநாள் சிறப்பு தொழுகையை மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய பெருநாள் உரையில் இஸ்லாத்தில் ஜாதிப் பிரிவுகள் இல்லை, இஸ்லாம் வட்டி, வரதட்சணை, மது,போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடமில்லை, இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை போதிக்கின்றது, இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது, ஒருவரை வாழ வைத்தவன் ஒரு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போல் ஆவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் நிர்வாகிகள் அய்யூப் கான்,ஹாஜா மைதீன், ஜலாலுதீன், L குறிச்சி சுலைமான் மற்றும் தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
பிரத்தியோகப் புகைபடத் தொகுப்பு கீழே..
செய்தி & படம்; குறிச்சி சுலைமான்






















No comments:
Post a Comment