கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் திரு.சாம்சன் எட்வர்டு அவர்கள் சுற்றச்சூழலை பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வமிக்கவராக இருந்து வருகிறார். அவருக்கு நம் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.
நாம் கடந்து செல்லும் சாலையோர மரங்களில், பல்வேறு விளம்பர பலகைகள் ஆணி அடித்து மாட்டி வைக்கப்பட்டிருப்பதை காணமுடிகிறது. மரங்களை பாதுகாக்கும் நோக்கில் அவர் அவ்வப்போது ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதுண்டு.
இன்று (25-07-2015, சனிக்கிழமை) கடையநல்லார் சுற்று வட்டார பகுதியில் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை அகற்ற வருமாறு அழைத்துள்ளார்.
நம் "புரவிகள் இயக்கம்" இதனை ஒரு நல்வாய்ப்பாக கருதி, அவருடன் களப்பணி ஆற்ற உள்ளோம். மேலும் நம்மால் முடிந்த அளவு புதிய மரங்களையும் நட உள்ளோம்.
புரவிகள் இயக்க நண்பர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
- புரவி. சங்கர்
9894597507
Thanks : Puravigal iyakkam



No comments:
Post a Comment