Monday, August 11, 2014

தாலுகாவாக மாறியது நமது கடையநல்லூர் ..


முதல் அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–

அரசின் சட்ட திட்டங்களை நிறைவேற்றும் முக்கிய கருவியாகவும், மக்களை நாடிச் சென்று உதவிகள் புரியும் ஆபத்பாந்தவனாகவும், அரசாங்கத்தின் ஆணிவேராகவும், நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும், மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பதுமான வருவாய்த் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் முனைப்பான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

பொதுமக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், காலதாமதமின்றி வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடைய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், புதிய கோட்டங்களை உருவாக்குதல், புதிய வட்டாட்சியர் அலுவலகங்களை உருவாக்குதல், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனியாக கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை கடந்த மூன்று ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, வருவாய்த்துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோயில், சிவகிரி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து கடையநல்லூர் உள்பட 15 புதிய வருவாய் வட்டங்கள் நடப்பாண்டில் 45 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துடன் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 254 வட்டங்களைச் சேர்த்து மொத்தம் 269 வட்டங்கள் செயல்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த அறிவிப்பின் மூலம், பொதுமக்களுக்கு, வருவாய்த் துறையினரின் சேவை விரைந்து கிடைக்கவும், வருவாய்த் துறையினர் தங்கள் சேவையை எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு ஆற்றவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


முதல்வர் அறிவிப்பை கீழ்காணும் லிங்க் இல் காணலாம் 

https://www.youtube.com/watch?v=kuL-WcxUuhQ


Saturday, July 26, 2014

குற்றாலம் சாரல் திருவிழா இன்று துவக்கம் ...

கலைநிகழ்ச்சிகளுடன்
குற்றாலம் சாரல் திருவிழா இன்று துவக்கம்



குற�றாலம் சாரல் திருவிழா இன்று (26ம் தேதி) கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெ றும் இவ்விழாவில் தினமும் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் அரசு சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டு சாரல் திருவிழா இன்று (26ம் தேதி) தொடங்கி ஒரு வாரம் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவிற்கு அமைச்சர் செந் தூர் பாண்டியன் தலைமை வகிக்கிறார். கலெக்டர் கருணாகரன் வரவேற்கிறார். சுற்றுலா துறை அமைச்சர் சண்முகநாதன் சாரல் விழா வை தொடங்கி வைத்து பேசுகிறார். விழாவில் சுற்றுலா ஆணையர் (பொறுப்பு) கண்ணன், முத்துக்கருப்பன் எம்பி, தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண் டியன் மற்றும் எம்பி எம்எல்ஏக்கள் பேசுகின்றனர். சுற் றுலா அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் நன்றி கூறுகிறார்.
விழாவில் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவின ரின் ஒயிலாட்டம், பரதநாட்டியம், பல்சுவை, இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா தொடர்ந்து ஒருவாரம் நடக்கிறது.
27ம் தேதி காலை 8 மணிக்கு நீச்சல் போட்டி, 28ம் தேதி மாலை 3 மணிக்கு நாய் கண்காட்சி, 29ம் தேதி காலை 10 மணிக்கு கோலப் போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி, 30ம் தேதி மதியம் 2 மணிக்கு சுற்றுச்சூழல் குறித்த ஓவியப் போட்டி, 31ம் தேதி காலை 10 மணிக்கு படகுபோட்டி, ஆக.1ம் தேதி மாலை 3 மணிக்கு ஆணழ கன் போட்டி என பல்வேறு போட்டிகள் சாரல் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படுகிறது. 27ம் தேதி முதல் மூன்று நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது.
தினமும் நடன ந�கழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், தோல்பாவை கூத்து, பல்சுவை, மெல்லிசை நிகழ்ச்சிகள், மேஜிக்ஷோ உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடக்கிறது. ஆக.2ம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.

நன்றி : தினகரன் 

Saturday, June 21, 2014

சென்னையில் இருந்து குற்றால சீசனை அனுபவிக்க சிறப்பு சுற்றுலா:



சென்னையில் இருந்து குற்றால சீசனை அனுபவிக்க சிறப்பு சுற்றுலா: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு...

குளு குளு குற்றாலத்தை கண்டு களிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமையிலிருந்து இரண்டு நாட்கள் குற்றாலத்திற்கு சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.

இச்சுற்றுலா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடையும். இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சுற்றுலாவில் தென்காசியில் இரவு தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.


இச்சுற்றுலாவிற்கான கட்டணம் நபருக்கு ரூ.3,500/- (தனி நபருக்கு தனி அறை வசதியுடன்), இருவர் பகிர்ந்து கொள்ளும் அறை நபருக்கு ரூ.3,250/-, குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.3,000/- (4 வயது முதல் 10 வயது வரை).

இக்கட்டணம் சொகுசு பேருந்து வசதி, தங்கும் விடுதி, 6 வேளை சைவ உணவு, சுற்றுலா ஸ்தல நுழைவுக் கட்டணம் மற்றும் வழிகாட்டி கட்டணம் மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை குற்றால சுற்றுலா முடிந்தவுடன் சென்னை திரும்பும் வழியில் தென்காசி (விஸ்வநாதர் கோயில்), ஸ்ரீ வில்லிப்புத்தூர் (ஆண்டாள் கோயில்) மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்படும்.

மேலும் விவரங்களுக்கு ‘மேலாளர் (சுற்றுலா), தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 2, வாலாஜா சாலை, சென்னை– 2’ என்ற முகவரியில் அல்லது 25384444, 25383333, 25389857 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளும்படி சுற்றுலாக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி: கடையநல்லூர் செய்திகள்

Friday, June 20, 2014

இலவச வேலை வாய்ப்பு முகாம் ..



இளைஞர்களுக்கான இலவச வேலைவாய்ப்பு முகாம் (தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு) தென்காசி ஐசிஐ மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 8 ஆம் வகுப்பு முதல் B.A. வரை படித்த, வேலைவாய்ப்பற்ற ஆண் பெண் இருபாலரும் இம்முகாமில் கலந்துகொள்ளலாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் கல்விச் சான்றிதழ், ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களுடன் நேரில் வரவும்.

தொடர்புக்கு: 0462 2500302, 2500303

Thanks : I LOVE TENKASI / COURTALLAM

Thursday, June 19, 2014

குற்றாலம் - சில தகவல்கள்






நமது குற்றாலத்தில் சீசன் தொடங்கியாச்சு அதற்காக சில பயனுள்ள தகவல்கள் ...



குற்றாலம் !!

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம்திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையேஅமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டுருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரைதென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலைகுளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும்அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்குபருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறிவிடும்அந்நேரம்  நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால்மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்கபடுவதில்லை.

குற்றாலத்தில் உள்ள அருவிகள்

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.
  • பேரருவி ( MAIN FALLS ), இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும்அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு,மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தைதருகிறது.
  • சிற்றருவி ( CHITRARUVI ), இங்கு நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தான் செண்பகாதேவி மற்றும்தேனருவிக்கு செல்ல முடியும்.
  • செண்பகாதேவி அருவி ( SHENBAGADEVI FALLS ) செண்பக மரங்கள்வழியாக பாய்கிறதுஅங்கு செண்பகாதேவி அம்மனுக்குஅர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.
  • அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவி ( THENARUVI ) உள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர்  உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.
  • ஐந்தருவி ( AINTHARUVI ) இவ்வனைத்திலும் மாறுபட்டஅருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.
  • இந்த அருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி ( PAZHATHOTTA ARUVI ), அல்லது விஐபி அருவி இருக்கிறது.
  • பழைய குற்றாலம் அருவி  ( PAZHAYA COURTALLA ARUVI ) இரண்டுபாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது.இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றிகுளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும்திறக்கப்பட்டது.
  • புலி அருவி ( PUZHIARUVI ) செயற்கையாக உருவாக்கப்பட்டது.இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது
  • ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளதுஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.


அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்

  • தெற்குமலை எஸ்டேட் - தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.
  • ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ளபடகு சவாரி.
  • பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை
  • சிறு குழந்தை பூங்காக்கள்.


குற்றாலத்தின் சிறப்புகள்

  • குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்லதெய்வீகமானஇடமும் கூடசிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை,இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டஓவியங்கள் பல இங்கு உள்ளது.
  • தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனதுகுற்றால  குறவஞ்சியில் பாடியுள்ளர்.
  • மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் இந்து சமய பாரம்பரியபடிசங்கு வடிவம் உள்ளது சிறப்பு.


குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்

  • பேரருவியில் உள்ள திருகுற்றாலனாதர் கோவில்.சித்திரை மாதம்முழு நிலவின் போது பத்து நாள் சிறப்பு பிரார்த்தனை இங்குநடைபெறும்.
  • பண்பொழியில் உள்ள திருமலைக்கோவில் - குற்றாலத்திலிருந்து இருந்து 8 கிமீ.
  • இலஞ்சியில் உள்ள குமரன்கோவில்குற்றாலத்திலிருந்து 1 கிமீ.
  • தென்காசியில்  உள்ள காசிவிசுவநாதர்கோவில்,குற்றாலத்திலிருந்து இருந்து 6 கிமீ.
  • புளியரையில் உள்ள தக்ஷினாமூர்த்தி கோவில்,குற்றாலத்திலிருந்து இருந்து 12 கிமீ.
  • பாபநாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில்,குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.
  • ஆரியன்கா ஐயப்பன்கோவில்குற்றாலத்திலிருந்து 35 கிமீ.


அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள்

  • பாலருவி - கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.
  • பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறுகுற்றாலத்திலிருந்து இருந்து35 கிமீ.
  • அகஸ்தியர் அருவி -  பாபநாசம் அருகே உள்ளது.
  • பாணத்தீர்த்தம் அருவி -  பாபநாசம் அருகே உள்ளது.
  • பாபநாசம் (லோயர்அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • பாபநாசம் (உயர்), காரையார்  அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • சேர்வலார் அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • மணிமுத்தாறு அணை -  பாபநாசம் அருகே உள்ளது.
  • களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் -  பாபநாசம் அருகேஉள்ளது.
  • மஞ்சோலை எஸ்டேட்மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட்பாபநாசம் அருகே உள்ளதுஇவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடிவரை அமைந்துள்ளன.


குற்றாலத்துக்கு வருவது எப்படி

சாலை  மூலமாக

சாலை வழியில் குற்றாலத்திலிருந்து பல்வேறு இடத்திற்கான தூரம்:
  • மதுரை: 160 கி.மீ.
  • திருநெல்வேலி: 59 கி.மீ
  • தென்காசி: 5 கி.மீ
  • செங்கோட்டை: 5 கி.மீ
  • மதுரை விமான நிலையத்தில் இருந்து: 160 கி.மீ
  • தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ
  • திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து: 190 கி.மீ

தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து குற்றாலம், பஸ் போக்குவரத்துமூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளதுமதுரையில் இருந்து செங்கோட்டைவரும் பேருந்துகளாலும்திருநெல்வேலியில் இருந்து தென்காசி மற்றும்செங்கோட்டை வரும் பேருந்துகளாலும் குற்றாலத்தை அடையலாம்.மேலும் கேரளா மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டைதென்காசி,திருநெல்வேலி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் மூலவும்குற்றாலத்தை அடையலாம்.

தொடர் வண்டி மூலமாக

குற்றாலத்தில் தொடர் வண்டி நிலையம் இல்லைஆனால் செங்கோட்டைமற்றும் தென்காசி நிலையத்தில் இருந்து இருபது நிமிடங்களில்குற்றாலத்தை அடையலாம்இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொடர்வண்டிகள்.
  • பொதிகை எக்ஸ்பிரஸ்செங்கோட்டை - சென்னைசென்னை -செங்கோட்டை
  • பயணிகள் வண்டிசெங்கோட்டை - மதுரைமதுரை -செங்கோட்டை
  • பயணிகள் வண்டிசெங்கோட்டை - திருநெல்வேலிதிருநெல்வேலிசெங்கோட்டை

Thanks : har1sh.blogspot.com/

Saturday, May 10, 2014

குற்றாலம் .... முந்தியதோ சீசன் .. :)



கடந்த சில தினங்களாகவே நமதூரில் வெயில் இல்லாமல் சாரல் மழையும் சில தினங்கள் ஆலங்கட்டி மழை என சொல்லப்படும் ஐஸ் கட்டி மழையும் பெய்து நம்மை மகிழ்வித்தது ...







கடந்த வாரம் கடும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது அனால் இந்தவாரம் அதிகமாக தண்ணீருடன் குற்றாலம் மிக அழகாக குளிக்கும் விதத்தில் உள்ளது ... தற்போது சுற்றாலப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப் பட்டுள்ளனர் மேலும் சுற்றாலப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது ..





சீசன் முந்திவிட்டது என்று வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ...




குறிப்பு : அணைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது ...

2000த்தை தாண்டிய நமது ஐ லவ் கடையநல்லூர் - சிறப்பு பதிவு







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐ லவ் கடையநல்லூர்
முகநூல் பக்கம்
சிறப்பு பதிவு
2000 + likes

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நமது ஐ லவ் கடையநல்லூர் பக்கம் இன்றைக்கு 2000க்கும் அதிகமான அன்பர்களின் விருப்ப பக்கமாக மாறி உள்ளது!
இது கடந்து வந்த பாதை....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனக்கு போன வருடம்.. பேஸ்புக்கில் பல ஊர்களின் பக்கங்களை பார்க்கும் போது ஒரு ஏக்கம் இருந்தது..!
சில சுமாரான ஊர்களுக்கெல்லாம்,
சில சிறிய ஊர்களுக்கெல்லாம் பேஸ்புக் பக்கம் இருக்கையில் நமது ஊருக்கென்ன குறை?! நமது ஊரில் பசுமை இல்லையா..? நமது ஊரில் முன்னேற்றம் இல்லையா!? ஊரைசுற்றி பள்ளிவாசல்களும், கோவில்களுகளும், சர்ச்களும் இல்லையா... கொஞ்சம் தள்ளிப்போனால் கொஞ்சும் சாரல் தெரிக்கும் தென்காசி இல்லையா,?! பொதிகை மலை குற்றாலம் இல்லையா!
நாம் சென்னையில் இருந்தே நமது ஊரை நினைத்து இவ்ளோ ஏங்கும் பொழுது வெளி மாநிலம்.. வெளிநாடு என லட்ச எண்ணிக்கையில் நமது ஊரில் இருந்தும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்தும் சென்று நமது ஊரைப்பற்றி சிந்திப்பவர் இல்லையா!??
என்ற சிறிய எண்ணத்தின் பெரிய விளைவுதான் இந்த
ஐ லவ் கடையநல்லூர் பக்கமும்
அதன் அங்கமான நீங்களும்!!

ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த பக்கம் என்றாலும்... விளையாட்டு விருவிருப்பானது..
காரணம், கண்ணுக்கெட்டாத தொலைவில் இருக்கும் கடையநல்லூரான்களின் ஊக்குவிப்புதான்!
நன்றிகள்!

சிலர்,
இதுலாம் என்ன வேலை வேற வேலை இல்லையா என ஏளனம் கூட செய்தனர்..!

தாகம் உள்ளவனுக்குத்தான் தண்ணீரின்
அருமை தெரியும்-அது
அமுதெனவும் புரியும்!

அப்படி வெளிநாடுகளில் வேலைப்பார்ப்பவர்கள்
சிலர் சில வருடங்களாகவும்,
பலர் பல வருடங்களாகவும்
நம்மூரின் மேல் உள்ள தாகத்தில் உள்ளனர்! அவர்கள் தாங்கள் நடமாடிய தெரு, தன்னுடைய கோவில், பள்ளிவாசல், பயின்ற பள்ளி இப்படி பல பகுதிகளை காணும்பொழுது அவர்கள் அடையும் ஆனந்தத்தை வெளிநாடில் இருந்தவன் என்றமுறையில் நானறிவேன்!
(சென்னை என்றான், வெளிநாடு என்கிறான் என்று யோசிக்க வேண்டாம், நாங்கள் இருவர்)
அப்படி விரும்பும் மக்களின் ஆசை, மற்றும் ஆதரவுகளோடு வெற்றி நடை போட்டு 1000 லைக்குகளை கடந்து வந்தபின்பு
செய்திகள் பலவும் போடத் துவங்கினோம்!
இதில் வேடிக்கை என்னவென்றால்
ஒரு உண்மைச்செய்தி போட்டதால் காவல்நிலையம் சென்று கால் கடுக்க நின்று வந்த அனுபவமும் உண்டு!
ஆனால் அதன் பின் எங்கள் வேகம் கூடியதே தவிர குறையவில்லை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடையநல்லூரில் உள்ள பல பெரியவர்கள் எங்கள் இன்பாக்ஸில் தொடர்புகொண்டு வெப்சைட் ஆரம்பிக்க சொல்கிறார்கள்!
வெளிநாட்டில் இருப்பவர்களும் இதே கோரிக்கையை வைக்கிறார்கள்.
<<<<<<<<->>>>>>>>>
ஆரம்பிப்பது பெரிதல்ல
அதை அட்டகாசமாக கொண்டு செல்லவும் வேண்டும்!!!
ஆதலால் பொறுமை காக்கிறோம்.
எங்கள் டீமில் பல நண்பர்கள் புகைப்படம் மற்றும் செய்திகளை அனுப்பி வருகின்றனர்!
அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பிடும்படியாக..
திரு.ஏபிஎம் மாரியப்பன்
திரு.சரவணன் போலிஸ் ஸ்டேசன் தெரு
திரு.அருண்குமார் குமந்தபுரம்
இவர்கள் தொடர்ந்து பல புகைப்படங்களையும் செய்திகளையும் சமீபகாலமாக அனுப்பி வருகின்றனர்.
நன்றிகள் நண்பர்களே!
உங்கள உதவி
தொடரனும் தோழர்களே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நமது பக்கம் ஜாதி மதம் ஊர் வித்யாசம் இன்றி
நமது கடையநல்லூர்க்கே உள்ள பெருமையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பு அம்சத்துடன் செயல்பட்டு வருகிறது...
இதில் உள்ள
அத்துனை அன்புள்ளங்களுக்கும் நன்றி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
•குறிப்பு•
உள்ளூரில் இருப்பவர்கள்
புகைப்படம் மற்றும் செய்திகளை தரவிரும்புகிறவர்கள், இன்பாக்ஸில் விருப்பம் தெரிவிக்கலாம்.
ஏனெனில் வெளிநாடுகளில் இருந்து பல தெருக்களுக்கான புகைப்படம், கந்தூரி விழா, கோவில் திருவிழா நிகழ்வுகளின் படம் மற்றும் செய்திகளை கேட்ட வண்ணம் உள்ளனர்.
இது எங்கள் வேண்டுகோள் மட்டுமே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது தவிர
கதை
கட்டுரை
கவிதை
சொந்தமாக எழுதும் திறன் படைத்தவர்கள் தங்கள் திறமைகளை இங்கே வெளியிடலாம்
அவர்களின் பெயர் இட்டு அவர்கள் திறமைகள்
பதிவுசெய்யப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி..நன்றி..நன்றி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமர்சனங்களை எதிர்நோக்கி
டீம்- ஐ லவ் கடையநல்லூர்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, April 5, 2014

நமது கடையநல்லூர் ... சில நினைவுகள்... - 5



இன்று நம் நினைவுகளில் இடம்பெறப்போவது ... வாடகை சைக்கிள் பயணம் ...
அனைவரின் வாழ்விலும் கண்டிப்பாக இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும் ... நான் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களையும் பார்த்த சிலவற்றையும் இங்கே எழுதுகிறேன் நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்தவற்றை தெரிவிக்கவும் ...

நமதூரில் வாடகைக்கென்று இருந்தது ஏகப்பட்ட கடைகள் .. மெயின் பஜார் ல மணி சைக்கிள் கடை.. முதுக்ரிஷ்ணாபுரம் ல சேனையர் தெரு பக்கத்துல விக்னேஷ் கடை , முத்தாரம்மன் கோயில் பக்கத்துல எம்.பீ கடை , பேட்டை ல கூனி சைக்கிள் , கிருஷ்ணபுரம் ல ராஜன் , மாவடிக்கால் ல சாமி கடை .. இன்னும் என்னெனவோ கடைகள் லாம் இருந்துச்சு நம்ம கடையநல்லூர் ல... அதுல நம்ம அனுபவம் அலப்பரை என்ன னு பாக்கலாம்...

ஒரு மணி நேரத்திற்கு சைக்கிளை வாடகைக்கு எடுக்க, சுமார் 3 மணி நேரமாவது, வாடகை சைக்கிள் கடையில காத்துக்கிடக்கனும்.

ஒரு மணி நேரத்துக்கு எடுத்துவிட்டு, ஒரு 5 நிமிசம் கூடிவிட்டால் விடும் டோஸுக்கு பயந்து, பக்கத்து தெருக்களிலையே சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கவேண்டும். 10 நிமிசத்துக்கு ஒரு தடவை அந்த வாடகை கடைக்கு போயி “மணியண்ணே, மணி என்ன?” ன்னு கேட்டுக்கேட்டு ஒரு மணி நேரத்தை ஒரு நிமிடம் குறையில்லாமல் சுற்றி கொண்டு போயி நிப்பாட்டும் போது, என்னமோ நம்ம சொந்த வண்டிய, அடுத்தவங்கிட்ட சும்மா கொடுக்குற மாதிரியிருக்கும்.

கோடை விடுமுறையில, பொட்டப் புள்ளைங்க முன்னாடி சீன் காட்ட இந்த மாதிரி ஒரு மணி நேர மிதிவண்டிதான், நமக்கு உற்ற துணையாக இருக்கும். இரண்டு கைய விட்டு ஓட்டுரேன்னு சொல்லி, பல்ல உடச்சிக்கிட்டது, ஸ்பீடா போகிறேன் பாருன்னு, நேர போய் சாக்கடைக்குள்ள மூஞ்சி குப்புற விழுந்தது, கண்ண மூடிகிட்டு வண்டி ஓட்டுறேன் பாருன்னு, வடகம் ஊத்தி வச்சிருக்கும் பாய்களை நாசம் பண்ணுறதுன்னு, வாங்கிய வீரத்தழும்புகள் ரொம்ப, ரொம்ப அதிகம்.

சைக்கிள் செயின் கழண்டு போவது என்பது என்னமோ, அவன் பொண்டாட்டி தங்க செயின் கழண்டு காணாம போனமாதிரி ஒரு பீளிங்க் அந்த கடைக்காரன் கொடுக்குறத பார்க்கனுமே, அட அட அட....உலக நடிகர்கள் எல்லாம் ஒன்னா அவன் மூஞ்சில உக்காந்த மாதிரி, அப்படியிருக்கும். போனதடவ செயின கழட்டுனதால இந்த தடவை எனக்கு தரமாட்டான், அதுனால உன் பெயரசொல்லி வாங்கிட்டு வான்னு, பக்கத்துல இருக்குற நண்பனிடம் காசு கொடுத்து வாங்கிவரச்சொல்வது, அப்படி வாங்கிய வண்டியில, கடைக்காரன் நம்மகிட்ட நல்லா ஏமாந்துவிட்டான் என்ற தெனாவட்டுல, சிரிச்சிக்கிட்டே வண்டிய ஓட்டிக்கொண்டு போனதை எல்லாம் எப்படி நமக்கு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடிகிறது!!!

இப்படியே வருடங்கள் உருண்டோடி, எங்க வீட்டுக்கும் சொந்தமாக ஒரு சைக்கிள் வந்து நின்றது. சின்ன வண்டிகளிலேயே பழக்கப்பட்ட நமக்கு பெரியவண்டியின் மோகம் ஆர்பரிப்பது தப்பில்லை, ஆனால் அதற்கு கால் எட்டவேண்டுமே என்ற அறிவு, ஏதாவது கல்லில் கால்வைத்து ஏறும் போது தெரிவதில்லை, மாறாக இரக்கத்தில் வண்டி வேகமாகமெடுத்து சொல்லும்போது, காலை ஊனமுயலும் போது முடியாமல், நமக்கு மேல் வண்டி வந்து கிடக்கும் போது அறிவது அறியாமை.

புள்ஸ் வைச்சு பழகுறதுக்கு, இந்த அடிமைகளை தேடி அலையிறதுக்கே நமக்கு போதும், போதும்னு ஆயிரும். அப்படியும் மீறி சிக்கினவனை வைத்து, அவனுக்கே நாம தொழில் படிக்குறோம்ங்குறது தெரியாம, டபுள்ஸ் வைச்சி பழகனும். ஒருத்தன கீழ தள்ளிட்டோம், அவ்வளவுதான், நியூஸ் புதிய தலைமுறை சேனலைவிட வேகமாக பரவிவிடும், அப்புறம் ஒருத்தனும் பக்கத்துல வரமாட்டான்.

இந்த காலத்து பசங்க எவ்வளவு கொடுத்து வச்சவங்க, சொந்தமாக ஒரு சைக்கிள் கனவு, ஆறாம் வகுப்பிலையே நிரைவேறிவிடுகின்றது..

ஆனால் கொடுத்து வைகாதவர்களும் கூட இவ்வளவு சந்தோசங்களை இழக்கின்றார்களே ...!!

நினைவுகள் தொடரும் ..

என்றென்றும்
ஐ லவ் கடையநல்லூர் டீம்
யாசீர் & யூ கே ஜி