Friday, July 31, 2015

மது ஒழிப்பு சசிபெருமாள் திடீர் மரணம் :(



தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசி பெருமாள், செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய போது அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2013ஆம் ஆண்டில், 34 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அங்கு இருந்த செல்போன் டவரில் ஏறி சசிபெருமாள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


சுமார் 5 மணி நேரம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவரை, தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சசிபெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அந்த நல்ல உள்ளத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...  


- ஐ லவ் கடையநல்லூர் டீம் ன்
                "ஆழ்ந்த இரங்கல்கள்"

No comments:

Post a Comment