Saturday, July 11, 2015

நமது சட்டமன்ற உறுப்பினர் திரு .செந்தூர் பாண்டியன் மரணம்,...


அதிமுகவைச்சேர்ந்தவரும் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தூர் பாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை 6.50 மணிக்கு காலமனார். 


64 வயதான செந்தூர் பாண்டியன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றதால் இலாக இல்லாத அமைச்சராக சில மாதங்கள் இருந்தார். பின்னர் அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

நமது பக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்..

No comments:

Post a Comment