Saturday, February 22, 2014

பிப்ரவரி 24 முதல் பொதிகை ரயிலின் நேரம் மாற்றம் ..



நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம் நமது பொதிகை ரயிலின் நேர மாற்றத்தைப் பற்றி... நாளை மறுநாள் முதல் அது அமலுக்கு வருகிறது ...

தெற்கு ரயில்வே அறிவித்தபடி, சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேர மாற்றம், இரு மார்க்கங்களிலும் பிப்.24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து ரயில்களை யும் இயக்க ஏதுவாக, சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே டிச.27ம் தேதி அறிவித்திருந்தது. அதன்படி பிப்.24ம் தேதி முதல் இந்த ரயில்கள் சென்னையில் இருந்து புறப்படும், வந்து சேரும் நேர மாற்றம் அமலுக்கு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.10 மணிக்கு புறப்படும், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் பிப்.24ம் தேதி முதல் இரவு 8.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் செங்கோட்டைக்கு காலை 8.20 மணிக்கு பதில் காலை 9 மணிக்கு போய்ச்சேரும். அதேபோல் செங்கோட்டையில் இருந்து, தினமும் இரவு 7 மணிக்கு பதிலாக பிப்.24ம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

அதனால் சென்னை எழும்பூருக்கு, காலை 7.05க்கு பதிலாக காலை 6.40 மணிக்கு வந்துச் சேரும். இந்த நேர மாற்றத்தினால், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் அனைத்து ரயில்நிலையங்களிலும் நின்று, புறப்படும் நேரம் மாறும். சென்னை எழும்பூரில் இருந்து தினமும் 8.50 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், பிப்.24ம் தேதி முதல் இரவு 8.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருநெல்வேலிக்கு காலை 8.35 மணிக்கு பதிலாக காலை 8 மணிக்கு போய்ச்சேரும். அதேபோல் திருநெல்வேலியில் இருந்து தினமும் இரவு 6.50 மணிக்கு புறப்படும், நெல்லை எக்ஸ்பிரஸ் பிப்.24ம் தேதி முதல் மாலை 7.25 மணிக்கு புறப்படும்.

நன்றி : ினகரன்
புகைப்படம் : அன்வர்

Friday, February 21, 2014

தீங்கு செய்யும் தினமலர் குழுமமே ..!!! மக்களே விழிப்பீர்...

கடைய நல்லூர் தாலுக்கா , 49/1 , 49/3 , 52/1 , 52/3 ஆகிய சர்வே எண்களைகொண்ட கோவில் நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் தின மலர் குழுமத்தினரால் அபகரிக்கப் பட்டு , சந்தை விலைக்கு இஸ்லாமிய சமூகத்தினருக்கு விற்க முடிவு செய்யப் பட்டு , அங்கே மசூதி கட்டவும் மதரசா கட்டவும் திட்டம் தீட்டப் பட்டுள்ளது 144 வீடுகளும் அங்கே கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது தெரிய வருகிறது ,

கோவிலுக்கு தர்மகர்த்தா என்கிற ஸ்தானத்தில் இருந்துக் கொண்டு , திரு முரளி , திரு வைத்தியநாதன் திரு வெங்கடராமைய்யர் போன்றவர்கள் இந்தச் செயலில் ஈடு பட்டுள்ளதும் தெரிய வருகிறது , பெரிய பத்திரிக்கையின் போர்வையில் இவர்கள் தப்பித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமா , தென்காசி பகுதியில் பல சொத்துக்கள் இப்படி இந்தக் கூட்டத்தால் அபகரிக்கப் பட்டுள்ளது தெரிய வருகிறது


நன்றி : கிஷோர் கே சுவாமி

பாராளுமன்ற தேர்தல் ஸ்பெஷல் ... 1



நேற்று தந்தி டிவியில் பாராளுமன்ற தேர்தல் சிறப்பு பார்வையில் நமது தென்காசி தொகுதி பற்றிய அலசல் ... உண்மையை புட்டு புட்டு வைத்தார்கள் ... லிங்கம் எம்.பி எதுவுமே செய்யவில்லை ... இன்னும் பாதி பேருக்கு நமது எம்.பி யாரென்றே தெரியாது .... காய்ந்து கிடக்கும் கடையநல்லூர் ... வறண்டிருக்கும் தென்காசி ... கேட்பாரற்ற புளியங்குடி ... இன்னும் பல பல....



இந்த முறை அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் ...





லிங்கத்தை பற்றிய உங்களது கருத்துக்கள் ... இந்த முறை லிங்கம் நின்றால் உங்களது ஆதரவு எப்படி இருக்கும் ... கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ... இன்னும் பேசலாம் ... விரிவாக ... விரைவில் ....



இவர் தான் நம்ம எம்.பி லிங்கம் ... நல்லா பாத்துகோங்க 

Thursday, February 20, 2014

நமது கடையநல்லூர்.. சில நினைவுகள்.. 4



இன்றைய நமது நினைவுகள் நமதூரில் நம்மை ருசியால் இழுக்கும் நமதூரின் புகழ்பெற்ற சில கடைகளைப்பற்றி ....

நமதூரைப் பொருத்தவரை ஒவ்வொரு கடைகளும் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பானவை.. முதலில் நமக்கு ரொம்ப பிடிச்ச ரொட்டி , சால்னா வில் ( அதாங்க புரோட்டா ) இருந்து ஆரம்பிப்போம் ... நம்ம ஊர்ல புரோட்டா - க்கு எல்லா கடைகளும் பேமஸ் தான் ஆனா முக்கியமா சொல்ல போனா முதலில் நினைவுக்கு வருவது செரிப் , அதுக்கப்புறம் ரஹ்மத், பேமஸ் , பிலால் அப்புறம் நம்ம கடையநல்லூர் அரசு மகளிர் பள்ளிக்கு பக்கத்துல போட்டு. இருக்கிற பிளாட்பாரம் கடைகளிலும் ரொம்ப சூப்பரா இருக்கும் ..

பீப் க்கு ரொம்ப பேமஸ் நு சொன்ன நம்ம கலுங்கடை ... அப்புறம் இடியாப்பத்திற்க்கு சொங்காமுத்து கடை.. அப்புறம் மலிவான பரோட்டாக்கு முத்துகிரிஷ்ணாபுரம் ல உள்ள கிழவர் கடை.. இப்படி ஒவ்வொரு கடையையும் வைத்து ஒவ்வொரு கதை சொல்லலாம்...

அடுத்து சைவம் கொஞ்சம் ரிச் ஆ சாப்டனும் நு நினைச்சா அமுதம் ஹோட்டல் இருக்கு .. சப்பாத்தி தோசை க்கு ரொம்ப பேமஸ்... அடுத்து சாப்பாடுக்கு அம்பிகை ஹோட்டல் , சண்முகம் ஹோட்டலும் ... காலை சைவ சிற்றுண்டிக்கு முப்புடாதி செட்டியார் , கிருஷ்ணா கான்டீன் போன்றவைகளும் பிரசித்தம்....

அல்வா அப்படினாலே நமக்கு முதல்ல நினைவுக்கு வர்றது நம்ம மூக்கையா லாலா கடை தான் .. அப்புறம் டீ , மிக்சர் க்கு நேஷனல் , அடுத்து நம்ம மெயின் பஜார் ல கருப்பசாமி அண்ணன் கடை , சாந்தி ஸ்வீட்ஸ், மேலக் கடையநல்லூர் லாலா வேல் போன்றவைகளும் ஸ்பெஷல் ..

பஜ்ஜி வடைக்கு நம்ம பெரிய பஸ் ஸ்டாண்ட் ராஜா கடை அப்புறம் ஆஸ்பித்திரி ஸ்டாப் சரவணா கான்டீன் , மேலக் கடையநல்லூர் பார்க் ஸ்டாப் கடை ... அதுக்கப்புறம் ஆப்பம், புட்டுக்கு நம்ம ஹிதாயதூள் பள்ளி எதிர்புறம் உள்ள கடை போன்றவைகளும் சிறப்பு வாய்ந்தவை...

ஆட்டுக்கால் சூப் , ரத்தப் பொரியல் , சமோசா சுண்டல் க்கு நம்ம முத்தாரம்மன் கோவில் பக்கத்துல , பெரிய பள்ளிவாசல் பக்கத்துல உள்ள வண்டிக்கடைகள் பேமஸ் ...

ஒரு ரூபாய் டீ கடை னு வித்தியாசமா பெயர் கொண்ட டீ கடைகளும் நம்ம ஊர்ல தான் உண்டு ...

உங்களுக்கு பிடிச்ச கடைகள் எது? ஏன் ? கமெண்ட் போடுங்கள் பார்க்கலாம் ....

நினைவுகள் தொடரும் ...

Saturday, February 15, 2014

நமது கடையநல்லூர்.. சில நினைவுகள்..3






இன்று நம்முடன் அதிக தொடர்பில் இருக்கும் நமது ஊர் பேருந்துகள் பற்றி பார்க்கலாம்..



7B,12, ஜப்பான் , கோமதி அம்பிகை ,எம்.ஆர்.கோபாலன் , இதெல்லாம் நம்ம அடிகடி உச்சரிக்கிற பெயரு.. இதை நம்ம உயிரற்ற ஒரு பொருளா பார்க்காம நம்மோட வாழ்ற ஒரு உயிராத்தான் பாக்றோம். எப்டின்னு கேக்றீங்களா.. ? நம்ம பஸ் கரெக்ட் டைம் க்கு வரலேனாலோ நம்ம லேட் ஆ போனாலோ ... நம்ம அங்க இருக்குறவங்க கிட்ட ஜப்பான் போய்ட்டானா , கோபாலன் போய்ட்டானா னு தான் கேப்போம் .. அவ்ளோ ஒரு பாசப் பிணைப்பு .. நம்ம ஊருக்கு பல பேருந்துகள் வந்து சென்றாலும் மேலே சொன்ன பேருந்துகள் தான் மிக முக்கியமானவை காரணம் நிறைய சொல்லிட்டே போகலாம்... எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே இந்த பஸ் லாம் இருக்கு ..



ஒவ்வொருத்தருக்கும் ஓவ்வொரு விதத்துல இந்த பேருந்துகளோடு தொடர்பிருக்கும்.. ஜப்பான் பஸ்ல தான் காசிதர்மம் , வடகரை , வாவா நகரம், பைம்பொழில் போன்ற ஊர்களுக்கு பயன் படுத்துவோம் ... இந்த பஸ்ல பைசாவும் கம்மி சீக்கிரமாவும் செங்கோட்டைக்கு போய்டலாம்... அடுத்து 7ஆம் நம்பர் பஸ் இது இடைகால் , ஊர்மேலழகியான், கோவிலூர் , சாம்பவர் வடகரை , சுரண்டை வழியாக வீ.கே.புதூர் போகும் .. இது பாஸ் பஸ் அதனால இடைகாலில் படிக்கும் மாணவர்கள் பெரும்வாரியாக இந்த பேருந்துகளைப் பயன் படுத்தி இருப்பார்கள் .. அடுத்து கோமதி அம்பிகை இது நம்ம ஆஸ்பித்திரி ஸ்டாப் , முத்தாரம்மன் கோயில் ஸ்டாப், மாவடிக்கால் , மலைக்கோவில் , வீரசிகாமணி வழியாக சங்கரன்கோவில் செல்லும் .. இதை பெரும்பாலும் மக்கள் சங்கரநாராயணன் கோவில்லுக்கு செல்வதற்கும் , அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும் பயன் படுத்தி இருப்பார்கள்... அடுத்து எம்.ஆர்.கோபாலன் இது சொக்கம்பட்டி , புளியங்குடி , சங்கரன்கோயில் வழியாக கோவில்ப்பட்டி வரை செல்லும் ... இதையும் மக்கள் அதிகம் பயன்படுத்துவர் ... இப்படி படிப்பதற்கு, தொழிலுக்கு, கோவிலுக்கு, உறவினர்களை பார்பதற்கு பயன்பட்ட நமது தோழமைப் பேருந்துகள் காதலைக் கற்றுத் தரவும் மறக்கவில்லை ... இன்றும் அந்த பேருந்துகளின் இருக்கை பின்புறம் நமக்கு விருப்பமானவர்களின் பெயர்களை எழுதி இருப்பதை காணலாம்...



இந்த பஸ்களோட ஒரே ஒரு சிக்கல் என்னனா எதாவது முக்கிய நிகழ்சிகள் வந்தால் இந்த பேருந்துகளை அங்கே திருப்பி விட்டுடுவாங்க .. அப்புறம் நமக்கு தண்ணி தான்... எடுத்துக்காட்டாக குற்றாலம் சீசன் க்கு குற்றாலம் ஸ்பெஷல் , கார்த்திகைக்கு திருமலைக் கோவில் ஸ்பெஷல் ... இப்படி பல...





இந்த பேருந்துகள் உங்களின் வாழ்கையில் ஏற்படுத்திய நினைவுகள் எது ... பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுடன்....







நினைவுகள் தொடரும்..

Tuesday, February 11, 2014

நமது கடையநல்லூர் ... சில நினைவுகள்... - 2


நினைவுகள் பகுதியில நம்ம இன்று நமதூரில் நம்மக்கு மிகவும் இணக்கமானதாக கருதப்படும் பெரியாற்றுப்படுகை , கருப்பாநதி அணை, மோட்டார் பாம்பு செட்டுகளைப் பற்றி நினைவு கொள்வோம் ..

என்னதான் நீங்க வெளியூர் ல அல்லது வெளிநாடுகள் ல எவ்ளோ தான் ஊர் சுத்தினாலும் நமதூருக்கு ஈடாகாது ... மிஞ்சி மிஞ்சி போனால் நீங்க பீச் பார்க் னு போவீங்க அத விட இங்க நம்ம ஊர்ல எவ்ளவோ இருக்கு ஏதாவது ஒரு விடுமுறை நாள் வந்தால் போதும் கூட்டம் கூட்டமா நம்ம எங்க போவோம் சொல்லுங்க பார்க்கலாம் ... கொஞ்சம் பெரிய ஆளுங்க உள்ள கூட்டம் கார் ஒ இல்ல பைக் ஒ எடுத்துக்கிட்டு கருப்பானதிக்கு போய்டுவாங்க அங்க போய் சமைச்சு சாப்டுட்டு வருவாங்க ..அப்புறம் இன்னொரு கூட்டம் சைக்கிள் எடுத்துக்கிட்டு அலி புரோட்டக் கடையில ரொட்டியோ இல்ல கிருஷ்ணா கேண்டீன் ல பூரி வடையோ ஏதோ அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாங்கி கட்டிக்கிட்டு பெரியாத்து பக்கம் போகும்... இன்னும் இந்த சின்னஞ் சிறு பசங்க நம்ம KCC கிணத்துக்கு நீச்சல் படிக்கணு ஒரு குரூப் கிளம்பிடும்... இதுல கிடைக்கற சந்தோசம் நீங்க பீச் க்கு போறதுலையோ இல்ல எங்கயாவது பெரிய பெரிய காபி ஷாப் போய் நேரத்த செலவு பண்றது எதுலயுமே கிடைக்காது ... சில பேர் தினமும் காலைல மாவடிக்கால் தோப்பு , கிருஷ்ணபுரம் தோப்பு , பெரியாத்து வயல் போன்ற இடத்துல இருக்குற பாம்பு செட்டுல கூட குளிக்க போவாங்க ... இது எல்லாம் நம்ம கடையநல்லூர்-ஐ விட்டால் வேற எங்கயும் கிடைக்காது ... நம்ம அட்டைக்குளத்துல காத்து வாங்கிக்கிட்டே அங்க இருக்குற வண்டிக் கடையில மீன் , காளான் , பாணி பூரி வாங்கி சாபிடற சுகத்துக்கு எதுமே ஈடாகாது ...

உங்கள்ள எல்லோரும் நான் மேல சொன்ன ஏதோ ஒன்னு பண்ணி இருப்பீங்க .. நான் நம்ம ஊர்ல இப்டிலாம் எதுமே பண்ணினதில்ல னு சொல்றவங்க தாராளமா கமெண்ட் போடலாம் ...

நினைவுகள் தொடரும் ...

Sunday, February 9, 2014

நமது கடையநல்லூர் ... சில நினைவுகள்... - 1



இந்த கட்டுரை நமதூரை நாம் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் ...

நம்ம என்னதான் வெளியூர்ல சொகுசா பங்களா ல இருந்தாலும் எவ்வளவு தான் பணம் சம்பாதிச்சாலும் கார் ல போனாலும் .. என்னதான் வித விதமா ... நம்ம சொந்த ஊர்ல ஒரு குடிசை வீட்லயோ ஓட்டு வீட்லயோ இருந்துக்கிட்டு.. பழைய சோறும் பச்சை மிளகாயும் வச்சு சாப்பிட்டு காலாற நடந்து மாப்ள எப்படி இருக்குற நு கேக்ரதுல இருக்குற சுகமே தனி.. அதான் ஒரு கவிஞன் சினிமா பாட்டுல "சொர்கமே என்றாலும் அது நம்மூரைப் போலவருமா" நு எழுதி இருப்பார் ... அது எவ்ளோ உண்மை னு நம்ம ஊரை விட்டு தள்ளி இருப்பவங்களுக்கு தெரியும் ..

எவ்ளோ பேர் நினைச்சு இருப்பீங்க...

ச்சே .. இங்க தர்ற சம்பளத்துல கால்வாசி சம்பளம் கடையநல்லூர் ல கொடுத்தாலும் போதும் அங்கேயே இருந்துருக்கலாம்...

ச்சே .. இதே மாதிரி நம்ம ஊர்ல காலேஜ் இருந்தா அங்கேயே படிச்சு இருக்கலாமே ..!!

ச்சே .. இதே மாதிரி நம்ம ஊர்ல நல்ல மாப்ள கிடைச்சு இருந்தா அங்கேயே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி இருக்கலாமே ...

மேலே சொன்ன ,மாதிரி வெளி ஊர்ல வேலை பார்க்கிறவங்க.. படிக்கிறவங்க.. கல்யாணம் ஆகி போனவங்க இப்படி எல்லோருமே ஏதோ ஒரு காரணத்துக்காக கண்டிப்பா நம்ம கடையநல்லூர்-ஐ நினைச்சு பார்த்திருப்போம்.. பார்போம் ...

இந்த நினைவுகளை தான் இனி "நமது கடையநல்லூர் ... சில நினைவுகள்" என்ற தலைப்பில் தொடர்ந்து நமது பக்கத்தில் வெளியாகும் ... படித்து உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்... உங்களது அனுபவங்களையும் அனுப்புங்கள்.. இங்கே பகிர்ந்து கொள்ளலாம் ..

என்றென்றும் உதய்.ஜி