Tuesday, August 11, 2015

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா.. இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

காரை யாறு சொரி முத்து அய் ய னார் கோயில் ஆடி அமா வாசை திரு வி ழா வை யொட்டி ஆலங் கு ளம் பகு தி யி லி ருந்து இன்று முதல் சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
நெல்லை மாவட்டம் காரை யாறு சொரி முத்து அய் ய னார் கோயி லில் ஆடி அமா வாசை திரு விழா கடந்த 6ம் தேதி கால் நாட்டு டன் தொடங் கி யது. இதை யொட்டி சுவா மிக்கு சிறப்பு பூஜை கள் நடந்து வரு கின் றன.
முக் கிய விழா வான ஆடி அமா வாசை வரும் 14ம் தேதி கொண் டா டப் ப டு கி றது. இதில் நெல்லை, தூத் துக் குடி மாவட்டத் தில் பல் வேறு இடங் களில் இருந்து ஏரா ள மான பக் தர் கள் கலந்து கொள் கின் ற னர். குறிப் பாக ஆலங் கு ளம் பகு தி யைச் சேர்ந்த பக் தர் கள் தங் கள் குடும் பத் து டன் ஒரு வாரத் திற்கு முன்பே வந்து விடு வார் கள்.
பக் தர் கள் வச திக் காக அரசு போக் கு வ ரத்து கழக பாப நா சம் பணி மனை சார் பில் இன்று (11ம் தேதி) முதல் ஆலங் கு ளத் தில் இருந்து பாப நா சத் திற்கு 25 சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. 13ம் தேதி 50க்கும் மேற் பட்ட பஸ் கள் பல் வேறு இடங் களில் இருந்து பாப நா சத் திற்கு இயக் கப் ப டு கின் றன.
ஆடி அமா வாசை திரு வி ழா வான 14ம் தேதி அன்று பல் வேறு இடங் களில் இருந்து பாப நா சத் திற்கு 100க்கும் மேற் பட்ட அரசு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
குறிப் பாக நெல்லை மற் றும் தென் காசி பகு தி யில் இருந்து தலா 25 பஸ் களும், வி.கே.புரம், ஆலங் கு ளம் பகு தி யில் இருந்து தலா 20 பஸ் களும் பாப நா சத் துக்கு இயக் கப் பட உள் ளன. சுரண்டை மற் றும் அம் பை யில் இருந்து தலா 5 பஸ் கள், முக் கூ டல், சேரன் ம கா தேவி, கடை யம் பகு தி யில் இருந்து தலா 2 பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. ஆடி அமா வாசை நாளில் மொத் தம் 106 அரசு சிறப்பு பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.
ஆடி அமா வாசை திரு வி ழா வை யொட்டி வரும் 14ம் தேதி அன்று அம்பை டிஎஸ்பி சிவ நே சன், வி.கே.புரம் இன்ஸ் பெக் டர் மாட சாமி ஆகி யோர் தலை மை யில் 4 டிஎஸ் பி கள், 5 இன்ஸ் பெக் டர் மேற் பார் வை யில் 100க்கும் மேற் பட்ட போலீ சார் மற் றும் ஊர்க் கா வல் படை யி னர் பாது காப்பு பணி யில் ஈடு ப டு கின் ற னர்.

Sunday, August 9, 2015

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!


இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!

நேற்று (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.
ப்ளஸ் டூ தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியிருக்கிறார். அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில் தரையிறங்கியிருக்கிறது. அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.
மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்
****************************************************************************

Miracles do happen in our daily life: - (ENGLISH VERSION)



On 8th. Aug. 2015 @ 6.30 am a uneducated single mother with her daughter were in Anna University Campus Chennai, looking for direction for Anna Arangam for her daughter counseling in B. Sc. Agriculture @ 8.30 am.

The mother a farmer tending cattle , and girl from a small village near Trichy due to some misguidance did not know that the counseling was in Agriculture University @ Coimbatore. Luck for the girl turned from some early morning walkers who informed her that she was to be in Coimbatore rather than Chennai.

The girl had scored 1017/ 1200 though suffering from illness during the +2 exams, somehow got misguided to attend interview at Chennai.

Thanks to the effort of one of the walkers who informed that he would sponsor to send both of them by flight immediately to Coimbatore. Other walkers pitched in friends/ contacts to inform the Registrar of the case. By 7.50 am it was agreed to look into the case. Meanwhile breakfast was provided to the mother and daughter .

The sponsor of the flight tickets transported them by @ 8.15 am to board the 10.05 am Coimbatore flight. Arrangement were made to pick them at Coimbatore airport @ 11.40 am by car. They reached the University counseling by 12.15 pm

The Registrar had made arrangement to ensure that the candidate got fair counseling. Through the counseling the candidate has been offered B.Sc. – bio technology in TNAU – Cbe. @ 2.00 pm the same day

Lets all believe that miracles do happen in our lives.

Share the info if you liked and spread the positive vibes

"மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு" தெருமுனைப் பிரச்சாரங்கள்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர், பஜார் கிளையின் சார்பாக (08-08-15) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மணிக்கூண்டு, மெயின் பஜார், நியூபஜார் ஆகிய பகுதிகளில் மொத்தம் 6 இடங்களில் "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு" தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றது.




Thanks : Kurichi Sulaiman

Saturday, August 8, 2015

அழகாகிக்கொண்டே வரும் கடையநல்லூர்...


கடையநல்லூர் மருத்துவமனை பேரூந்து நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்த சமூகசேவகர் இயற்கை ஆர்வலர் காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு Samson Edward அவர்களையும் அந்தப்பணியினை மிகவும் ஈடுபாட்டுடன் செய்து முடித்த மாணவர்களையும் மனதார பாராட்டுகிறோம் மேலும் பேருந்து நிறுத்த கம்பங்களில் வண்ணம் பூச நடவடிக்கை எடுக்குமாறு கடையநல்லூர் நகராட்சிக்கு கோரிக்கையினை வைக்கிறோம்.



போட்டோ உதவி: Rajendra prasad & Manimaran

Friday, August 7, 2015

ஆகஸ்ட் 15 முதல் நமது புதிய வெப்சைட் தொடக்கம்..



கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் முகநூல் பயணத்தில் (ilovekadayanallur) ஆரம்பித்த நமது பயணம் அதற்கடுத்து பிளாக்கர் எனப்படும் வலைப்பூவில் நமது செய்திகளைப் பகிர்ந்து வந்தோம்... அந்த வலைபூ நமது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று குறுகிய காலத்திலையே 10000 பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருகிருக்கிறது..

இதனிடையே பலர் நம் இன்பாக்ஸில் வந்து ஒரு வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தனர் அதில் முதலாவதாக  நமக்கு அந்த எண்ணத்தை ஓராண்டுகளுக்கு முன்பே சொன்னவர் S.P. துரை  அண்ணா அவர்கள் .. மேலும் பலரும் இதற்கு ஊக்கப் படுத்திக் கொண்டிருந்தனர் அவர்களைப் பற்றிய விரிவான பதிவுகள் விரைவில்,,

அனைவரின் வேண்டுகோளுகிணங்க "நெல்லை ஹெல்ப் லைன்" (www.nellaihelpline.comஅண்ணன் சக்திவேல் அவர்களின் உதவியோடு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி www.ourkadayanallur.in  என்னும் வெப்சைட் துவங்க உள்ளோம்.. உங்களின் பேராதரவு இதற்கு தேவை...

 இந்த தளம் பற்றிய உங்களது கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.. வேறு ஏதேனும் தகவல் மற்றும் கருத்துக்களுக்கு கீழ்காணும் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்...

நன்றி... நன்றி... நன்றி...

-ஐ லவ் கடையநல்லூர் & டீம் 

Contact US :


Facebook       :   www.fb.com/ilovekadayanallur
Twitter           :   www.twitter.com/ourkadayanallur
Google Plus   :    +ourkadayanallur
E-Mail id       :   ourkadayanallur@gmail.com
Blogger          :   www.ourkadayanallur.blogspot.com
Website          :   www.ourkadayanallur.in


கடையநல்லூர் உட்பட 12 வட்டங்களில் நாளை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஆக.8) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் ஒரு கிராமத்தில் 2ஆவது சனிக்கிழமையில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி இம்மாதம் 8ஆம் தேதி 12 வட்டங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.

திருநெல்வேலி வட்டத்தில் கோடகநல்லூர் கிராமத்திலும், பாளையங்கோட்டை வட்டத்தில் கீழ நத்தம், சங்கரன்கோவில் வட்டத்தில் தன்னூத்து, தென்காசி வட்டத்தில் திப்பணம்பட்டி, செங்கோட்டை வட்டத்தில் தெற்குமேடு, சிவகிரி வட்டத்தில் இடையன்குளம் கிராமத்திலும் குறைதீர் முகாம் நடைபெறும்.

வீ.கே. புதூர் வட்டத்தில் ரதமுடையார் கிராமத்திலும், ஆலங்குளம் வட்டத்தில் கரும்பனூத்து, அம்பாசமுத்திரம் வட்டத்தில் கோபாலசமுத்திரம், நான்குனேரி வட்டத்தில் படலையார்குளம், ராதாபுரம் வட்டத்தில் கோவலன்குளம், கடையநல்லூர் வட்டத்தில் கடையாலுருட்டி கிராமத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும் என்றார் அவர்.

Thursday, August 6, 2015

17,18,ஆகிய வார்டுகளில் செயல்படாத அடிபம்புகள்




17,18,ஆகிய வார்டுகளில் புதுர்&பெண்கள் பள்ளிக்கூடம் அருகே மாணவர்களுக்காக செயல் பட்ட அடிபம்புகள் செயல்படாமலும் குப்பை காடாக மாறி பலமாதங்கள் ஆகியும் சரிசெய்யப்பபட வில்லை பல முறை அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் கொடுத்தும் நாகராட்சி நிர்வாகம் கன்டுகொள்ள வில்லை...விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Thanks ; Kurichi Sulaiman

குற்றாலம் மெயினருவியில் பாறை விழுந்து ஒருவர் காயம்




குற் றா லம் மெயி ன ரு வி யில் நேற்று மது ரை யைச் சேர்ந்த அய் யா கோன் மகன் பால கி ருஷ் ணன் (40) என் ப வர் குளித் துக் கொண் டி ருந் தார். அப் போது மெயி ன ரு வி யில் இருந்து உருண்டு வந்த சிறிய பாறை ஒன்று பால கி ருஷ் ணன் தலை யில் விழுந் தது. இதில் அவ ருக்கு காயம் ஏற் பட்டது. உட ன டி யாக அவரை பாது காப்பு பணி யில் ஈடு பட்டி ருந்த தீய ணைப்பு வீரர் கள் மற் றும் போலீ சார் மீட்டு தென் காசி அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர். இந்த சம் ப வத் தால் அப் ப கு தி யில் சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட்டது.

குற்றாலத்தில் மீண்டும் இதமான சூழல்...



குற் றா லத் தில் 10 தினங் களுக்கு பிறகு நேற்று சற்று இத மான சூழல் நில வி யது.

குற் றா லத் தில் இந்த ஆண்டு சீசன் பெரு ம ளவு ஏமாற்றி விட்டது. மொத் தம் உள்ள 90 நாட் கள் சீச னில் கிட்டத் தட்ட 65 தினங் கள் முடி வ டைந்து விட்ட நிலை யில் சுமார் பதி னைந்து தினங் கள் மட்டுமே சாரல் பெய் துள் ளது. மீத முள்ள நாட் கள் சாரல் இல் லா த து டன் சுள் என்று வெயி லும் அடித்து வந் தது.

இந் நி லை யில், சுமார் 10 தினங் களுக்கு பிறகு நேற்று வெயி லின் தாக் கம் குறைந்து சற்று இத மான சூழல் நில வி யது. மலை யில் லேசான மேக மூட்டம் காணப் பட்டது. மேலும் சிறிது நேரம் மெல் லிய சாரல் பெய் தது. இருந் த போ தும் அரு வி களில் தண் ணீர் குறிப் பி டத் தக்க அள வில் அதி க ரிக் க வில்லை.
மெயி ன ரு வி யில் ஆண் கள் பகு தி யில் தண் ணீர் ஓர ளவு நன் றா க வும், பெண் கள் பகு தி யில் குறை வா க வும் விழு கி றது. ஐந் த ரு வி யில் தண் ணீர் வரத்து சிறிது அதி க ரித் துள் ளது. நேற்று முன் தி னம் வரை நான்கு பிரி வு களில் தண் ணீர் விழுந்த நிலை யில் நேற்று ஐந்து பிரி வு களில் தண் ணீர் விழுந் தது. பழைய குற் றா லத் தில் தண் ணீர் சுமா ராக விழு கி றது.
புலி ய ரு வி யில் தண் ணீர் வரத்து அடி யோடு நின் று விட்டது. ஆடி மாதம் என் ப தால் சுற் றுலா பய ணிகள் கூட்டம் ஓர ளவு இருந் தது. ஐந் த ரு வி யில் மட்டும் வரிசை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்டனர்.

கடையநல்லூர் வட்டம் கொடிக்குறிச்சியில் இன்று அம்மா திட்ட முகாம்



கடையநல்லூர் வட்டம்  கொடிக்குறிச்சியில்  இன்று  அம்மா திட்ட முகாம் நடைபெறும்.

இந்த முகாம்களில், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு- இறப்பு சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.

தகுதியான மனுக்களுக்கு முகாம் இடத்திலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.

Tuesday, August 4, 2015

கடையநல்லூர் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு



நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 37). விவசாயி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார்.


பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.


வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் விவசாயி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thanks ; Malai Malar

ரோட்டரி சங்கம் சார்பில் மறைந்த திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி கூட்டம்..

நமதூரில் ரோட்டரி சங்கம் சார்பில் மறைந்த திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு மற்றும் மரம் நடும் விழா அஞ்சலி கூட்டம் நடைபெற்றது... நமது காவல்துறை ஆய்வாளர் திரு.சாம்சன் அவர்களும் பங்கேற்றார்...







Thanks : Thai Poly Clinic

குற்றாலம் சாரல் திருவிழா மீண்டும் துவங்கியது கொழு, கொழு குழந்தைகள் போட்டி..



குற் றா லத் தில் சாரல் திரு விழா மீண் டும் துவங் கி யது. சமூ க ந லத் து றை யின் ஒருங் கி ணைந்த குழந் தை கள் வளர்ச்சி திட்டத் தின் சார் பில் கொழு கொழு குழந் தை களுக் கான போட்டி நடந் தது.

குற் றா லத் தில் சாரல் திரு விழா கடந்த மாதம் 25ம் தேதி துவங் கி யது. முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் க லாம் மறைவை தொடர்ந்து சாரல் திரு விழா கடந்த 28ம் தேதி முதல் ஒரு வாரத் திற்கு ரத்து செய் யப் பட்டது. ஒரு வாரம் கழிந்த நிலை யில், நேற்று சாரல் திரு விழா மீண் டும் துவங் கி யது.
நேற்று கலை வா ணர் அரங் கில் நடந்த கொழு, கொழு குழந் தை கள் போட்டிக்கு மாவட்ட சமூக நல அலு வ லர் உமா ம கேஸ் வரி தலைமை வகித் தார். பேரூ ராட்சி தலைவி லதா அ சோக் பாண் டி யன் துவக்கி வைத் தார். ஒருங் கி ணைந்த குழந் தை கள் வளர்ச்சி திட்ட அலு வ லர் உமா பதி, வளர்ச்சி அலு வ லர் கள் ஜெய சூர்யா, விஜ ய லெட் சுமி, சரஸ் வதி, அதி முக பேரூர் செய லா ளர் அசோக் பாண் டி யன், கவுன் சி லர் சேகர், சுரேஷ், ஜிம் ஜெய சங் கர் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.



போட்டி யில் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களி லி ருந்து மொத் தம் 32 குழந் தை கள் கலந்து கொண் டன. போட்டி யின் நடு வ ராக மேல க ரம் அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத் துவ அலு வ லர் அல் ரூத் மேரி செயல் பட்டார். இதில் ஆய் க்குடி அனந் த பு ரத்தை சேர்ந்த சுப் பு ராஜ் மகள் லசிகா முத லி ட மும், செங் கோட்டை ஷேக் மீ ரான் மகன் அல் பர் ஹ மீத் இரண் டா மி ட மும், செங் கோட்டை பிர பா க ரன் மகள் பிரி ய வ தனா மூன் றா மி ட மும் பெற் ற னர். வெற்றி பெற்ற குழந் தை களுக்கு மாலை யில் நடந்த சாரல் திரு விழா நிகழ்ச் சி யில் பரி சு கள் வழங் கப் பட்டன.
கோலப் போட்டி
குற் றா லம் சாரல் திரு வி ழா வில் நேற்று பெண் களுக் கான கோலப் போட்டி நடந் தது. இதில் மாவட்டத் தின் பல் வேறு பகு தி களி லி ருந் தும் 60க்கும் மேற் பட்ட சுய உ த விக் குழு பெண் கள், அங் கன் வாடி பணி யா ளர் கள், சுற் றுலா பய ணி கள் உட் பட பலர் கலந்து கொண் ட னர். இதில் செங் கோட்டையை சேர்ந்த பாண் டித் து ரைச்சி முத லி ட மும், கல் லி டைக் கு றிச் சியை சேர்ந்த பிரேமா இரண் டா மி ட மும், ஆம் பூரை சேர்ந்த மனோன் மணி மூன் றா மி ட மும் பெற் ற னர். வெற்றி பெற்ற பெண் களுக்கு மாலை யில் நடந்த சாரல் திரு விழா நிகழ்ச் சி யில் பரி சு கள் வழங் கப் பட்டன.

Thanks : Dinakaran

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் பால்குடம் ஊர்வலம்..



கடை ய நல் லூர் கிருஷ் ணா பு ரம் அப ய ஹஸ்த ஆஞ் ச நே யர் கோயி லில் ஆடிப் பெ ருக்கு விழா வை யொட்டி பால் கு டம் ஊர் வ லம் மற் றும் சுவா மி க்கு பால பி ஷே கம் நடந் தது.
கடை ய நல் லூர் கிருஷ் ணா பு ரம் அப ய ஹஸ்த ஆஞ் ச நே யர் கோயி லில் ஒவ் வொரு வரு ட மும் ஆடி மா தம் 18ம் தேதி ஆடிப் பெ ருக் கன்று உலக அமை திக் காக அகில உலக ஆஞ் சநே யர் பக் தர் கள் சார் பில் பாலா பி ஷே கம் நடை பெ றும். அதன் படி 14வது ஆண் டாக நேற்று ஆடிப் பெ ருக்கைமுன் னிட்டுபால் குடம் ஊர் வ லம் நடந் தது. கடை ய நல் லூர் கரியமாணிக்க பெரு மாள் கோயி லில் இருந்து காலை 7.40 மணிக்கு காணி ம டம் சுவாமி பொன் கா ம ராஜ் தலை மை யில் 350க்கும் மேற் பட்ட ஆஞ் ச நேய பக் தர் கள் பால் குடம் எடுத்து பண் பொழி சாலை, தேசிய நெடுஞ் சாலை, கோபா ல கிருஷ் ணசாமி தெருவழி யாக கோயிலை வந்தடைந் த னர். தொடர்ந்து சுவா மி கக்கு பாலா பி ஷே கம் நடந் தது. பின் னர் சுவா மிக்கு நெய் காப்பு பூஜை நடந் தது. இந் நி கழ்ச் சி யில் கோயில் நிர் வாக செயல் அலு வ லர் கண ப தி மு ரு கன், பரம் பரை அறங் கா வ லர் கள் உட் பட 500க்கும் மேற் பட்ட பக் தர் கள் கலந்து கொண் ட னர்.



கடை ய நல் லூர் கிருஷ் ணா பு ரம் அப ய ஹஸ்த ஆஞ் ச நே யர் கோயி லில் ஆடிப் பெ ருக்கு விழா வை யொட்டி பால் கு டம் ஊர் வ லம் நடந் தது.
கடை ய நல் லூர் கிருஷ் ணா பு ரம் அப ய ஹஸ்த ஆஞ் ச நே யர் கோயி லில் ஒவ் வொரு வரு ட மும் ஆடி மா தம் 18ம் தேதி ஆடிப் பெ ருக் கன்று உலக அமை திக் காக அகில உலக ஆஞ் சநே யர் பக் தர் கள் சார் பில் பாலா பி ஷே கம் நடை பெ றும். அதன் படி 14வது ஆண் டாக நேற்று ஆடிப் பெ ருக்கைமுன் னிட்டுபால் குடம் ஊர் வ லம் நடந் தது. கடை ய நல் லூர் கரியமாணிக்க பெரு மாள் கோயி லில் இருந்து காலை 7.40 மணிக்கு காணி ம டம் சுவாமி பொன் கா ம ராஜ் தலை மை யில் 350க்கும் மேற் பட்ட ஆஞ் ச நேய பக் தர் கள் பால் குடம் எடுத்து பண் பொழி சாலை, தேசிய நெடுஞ் சாலை, கோபா ல கிருஷ் ணசாமி தெருவழி யாக கோயிலை வந்தடைந் த னர். தொடர்ந்து சுவா மி கக்கு பாலா பி ஷே கம் நடந் தது. பின் னர் சுவா மிக்கு நெய் காப்பு பூஜை நடந் தது. இந் நி கழ்ச் சி யில் கோயில் நிர் வாக செயல் அலு வ லர் கண ப தி மு ரு கன், பரம் பரை அறங் கா வ லர் கள் உட் பட 500க்கும் மேற் பட்ட பக் தர் கள் கலந்து கொண் ட னர்.

இன்று கடையநல்லூரில் முழு அடைப்பிற்கு அழைப்பு....


Monday, August 3, 2015

நம் நகரை நேசிப்பவரா நீங்கள்..?விரைவில் தொடங்க இருக்கும் நமது வெப்சைட் குழுவில் இணைய ஒரு வாய்ப்பு..





விரைவில் தொடங்க இருக்கும் நமது வெப்சைட் குழுவில் இணைய ஒரு வாய்ப்பு..

ஆண் பெண், வயது, மதம், சாதி, மொழி போன்ற வேறுபாடு பாராது, யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.


Our Teams in which you can Join:

• Facebook/Twitter Page Support Team.
• Website Support Team.
• News Collection/Content Creation team.
• Social Responsibility Team.
• Commercial Activities Team.
Its not a paid job. Its purely a voluntary work.
Selection Process:
• Profile Verification
• Character Analysis
• Reliability Analysis
• Tele-Interview

Prestigious "our newly website " ID Card will be Given for Deserving Members.



For More Details.. Pls write to
ourkadayanallur@gmail.com




கடையநல்லூர் உட்பட திருநல்வேலி மாவட்ட அரசு, தனியார் ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நாளைவரை நீட்டிப்பு



அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேட்டை அரசு ஐடிஐ முதல்வர் அப்துல்காதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் திட்டத்தின் கீழ் ஐடிஐகள் செயல்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை, தென்காசி, வீ.கே.புதூர், அம்பை, கடையநல்லூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஐடிஐ களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 26-6-2015 முதல் 10-7-2015 வரை நடைபெற்றது. பொறிப்பகுதி, கம்மியர் மோட்டார் வண்டி, பற்றவைப்பவர், மின்சாரப் பணியாளர், பம்ப் மெக்கானிக் மற்றும் இயக்குபவர், கம்மியர், தட்பவெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் பிரிவுகளுக்கு மாணவர்-மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேர்வு பெற்றவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை செவ்வாய்க்கிழமை (ஆக. 4) வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஐடிஐகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

கம்பியாள், பற்றவைப்பவர் போன்ற பிரிவுகளில் சேர 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற தொழிற்பிரிவுகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆண், பெண் இருபாலரும் அனைத்து பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம் மாதம் 4 ஆம் தேதிக்குள் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் அளிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இம் மாதம் 5 ஆம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். இதில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்க வேண்டும்.

இதுகுறித்த விவரங்களுக்கு அரசு ஐடிஐகளை 0462-2342005, 04633-277962, 04634-251108, 04633-280933 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thanks : Dinamani

Sunday, August 2, 2015

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்



குற் றா லத் தில் ஒரு வாரத் திற் கும் மேலாக வெயில் கொளுத்துவதால் அரு வி களில் தண் ணீர் வரத்து குறைந் து விட்டது. பழை ய குற் றால அரு வி யில் குளிப்பதற்காக நேற்று நீண்ட வரி சை யில் காத் தி ருக் கும் சுற்றுலா பயணிகள்.

குற் றா லத் தில் சுள் என்று வெயி ல டித்து வரு வ தால் அரு வி களில் தண் ணீர் வரத்து வெகு வாக குறைந் து விட்டது. விடு முறை தின மான நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி ய தால் அனைத்து அரு வி களி லும் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.
குற் றா லத் தில் கடந்த 20 ஆண் டு களில் இல் லாத அள விற்கு இந்த ஆண்டு சீசன் கண் ணா மூச்சி காட்டி வரு கி றது. ஜூன், ஜூலை மாதங் களில் மொத் தம் 15 தினங் கள் மட்டுமே சாரல் பெய் துள் ளது. கடந்த எட்டு தினங் க ளாக சுள் என்று வெயில் அடிக் கி றது. தொடர்ந்து சாரல் இல் லா த து டன் வெயி லும் அடித்து வரு வ தால் அரு வி களில் தண் ணீர் வரத்து வெகு வாக குறைந் து விட்டது.
மெயி ன ரு வி யில் நேற்று ஆண் கள் பகு தி யில் சுமா ரா க வும், பெண் கள் பகு தி யில் குறை வா க வும் தண் ணீர் விழுந் தது. ஐந் த ரு வி யில் நான்கு பிரி வு களில் தண் ணீர் ஓர ளவு விழுந் தது. பழைய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி ஆகி ய வற் றி லும் தண் ணீர் சுமா ரா கவே விழு கி றது. விடு முறை தின மான நேற்று குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. இத னால் அனைத்து அரு வி களி லும் சுற் றுலா பய ணி கள் கார் பார்க் கிங் பகுதி வரை நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.

Saturday, August 1, 2015

அவசரமான செய்தி உயிர்காக்க உதவுங்கள்..
















தயவு செய்து தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் இல்லாவிட்டால் பகிரவாவது செய்யுங்கள்

ஒரு நேர்மையான அதிகாரியின் நிலை இன்று இவர் குழந்தைக்கு அவசரமாக ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை இந்த அதிகாரி நினைத்திருந்தால் எத்துனையோ பணம் சம்பாதித்திருக்க முடியும் ஆனால் தற்போது வரை நேர்மையை கடை பிடித்துருகிறார் அதனால் தற்போது அவர் மகனுக்கு தேவையான பணத்தை பிறட்டுவதில் சிரமத்தில் உள்ளார் உதவிட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ளவும் அவர் எண்ணை திலீபன் 9498195244

S.n.thileeban working as sub inspector of police in Ettayapuram police station. My son named RITHWIN aged just 67 days is suspected to be suffering from HAEMOCHROMATOSIS (ACUTE LIVER FAILURE) who is now getting treatment in Global hospitals perumbakkam Chennai.. Doctors suggested for LIVER TRANSPLANTATION which may be a sole way to rescue my son's life. Expected cost for transplantation is around 22 lakhs...

காவல் நிலயத்தில் சார் ஆய்வாளராக பணியாற்றும் S.N.திலீபன்.
பிறந்த 67 நாட்களே ஆன அவரது குழந்தைக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தக் குழந்தையின் உயிரை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்க்கு 22 இலட்ச ரூபாய் செலவு ஆகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்
அந்தக் குழந்தைகு உதவி செய்ய மனம் உள்ளவர்கள் திரு.திலீபனை தொடர்பு கொள்ளவும் 9498195244

Thanks : Tenkasi Times



10000 + பார்வையாளர்கள் .... நன்றி..!! நன்றி..!! நன்றி...!!


10000 + பார்வையாளர்கள்





ஆதரவு அளித்து வரும் அணைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் பல...

நமது பிளாக் விரைவாக 10000 பார்வையாளர்களைக் கடந்து சாதனை......


முக்கியமான நமதூர் செய்திகளுக்கு இணைந்திருங்கள்... நமது பிளாக் மற்றும் முகநூல் பக்கத்துடன்...

பிளாக் : www.ourkadayanallur.blogspot.com
முகநூல் பக்கம் : www.fb.com/ilovekadayanallur
மின்னசல் முகவரி : ourkadayanallur@gmail.com

“விரைவில் ஒரு நல்ல செய்தியோடு சந்திக்கிறோம்”

- டீம் ஐ லவ் கடையநல்லூர்

கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம்: உறுப்பினர்கள் தர்னா



கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் சைபுன்னிஷாசேகனா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆணையர் அயுப்கான், பொறியாளர் ஷாகுல்கமீது, துப்புரவு அலுவலர் ஜெயபால்மூர்த்தி, துணைத் தலைவர் ராஜையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 6 மாதங்களாக நகராட்சியில் எவ்வித பணியும் நடைபெறவில்லை. பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் பெரியாற்றுப் பகுதியில் கிணறு வெட்டுவது தொடர்பான தீர்மானம் நகர்மன்றத்தில் கொண்டு வரப்பட்டு பல மாதங்களாகியும் பணி நடைபெறவில்லை.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்து உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, ராஜா ஆகியோர் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து உறுப்பினர்கள் அப்துல்லத்தீப்,நயினாமுகமது,முத்தையாபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். இதையடுத்து, உரிய பதில் தெரிவிக்குமாறு ஆணையரை, நகர்மன்றத் தலைவர் கேட்டுக் கொண்டார். கிண்று வெட்டுவது உள்ளிட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என ஆணையர் தெரிவித்தார்.

தெருவிளக்குகளை முறையாக சரிசெய்வதில்லை என உறுப்பினர்கள் முத்தையாபாண்டியன், ராஜா ஆகியோர் புகார் தெரிவித்தனர். தெருவிளக்குகளைப் பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்தார். அப்துல்கலாமின் படத்தை நகர்மன்றக் கூட்ட அரங்கில் வைக்க வேண்டுமென உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் தீர்மானம் கொண்டு வந்தார்.அதை அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். முன்னதாக மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மறைவுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Thanks : DInamani

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் கலாமுக்கு அஞ்சலி



ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது.

இந்திய மருத்துவக் கழகம் குற்றாலம் கிளை மற்றும் ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில், அவருடைய உருவபடத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆய்க்குடி சிவன் கோயில் முன்பிருந்து தொடங்கிய மௌன அஞ்சலி ஊர்வலத்தில் அமர்சேவா சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலர் சங்கர்ராமன், மருத்துவக் கழக கிளைத் தலைவர் முருகையா, மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Thanks : Dinamani

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்பாட்டம் ; 72 பேர் கைது



மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக யாகூப்மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, கடையநல்லூரில் தடையை மீறி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் 72 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கட்சியின் மாவட்டத் தலைவர் திவான்ஓரி தலைமையில், அக் கட்சியினர் கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர்அலிஉஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர் நயினாமுகமது, பொதுச் செயலர் யாசர்கான், மாவட்டச் செயலர் ஜிந்தா, பொருளாளர் அசன், நகரத் தலைவர் செய்யது, செயலர் அப்துல்லா, செய்தித் தொடர்பாளர் அபுலைஸ் உள்ளிட்ட 72 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையொட்டி புளியங்குடி டி.எஸ்.பி.வானுமாமலை, கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சாம்சன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Thanks : Dinamani

முத்துகிருஷ்ணாபுரம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது,..



முத்துகிருஷ்ணாபுரம் கடையநல்லூர் அருள்மிகு முத்தாரம்பிகைக்கு 1008 திருவிளக்கு பூசை சிறப்பாக நடைபெற்றது..

அழகான அலங்காரத்தில் ஜொலித்த அம்மன்..