Sunday, July 26, 2015

கடையநல்லூர் அருகே இருளில் மூழ்கி இருக்கும் சாலை...




கடையநல்லூர் அடுத்துள்ள பண்பொழி அருகே அமைந்துள்ளது கரிசல் குடியிருப்பு கிராமம். இங்கு 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு விவசாயமே பிரதான தொழில். இதை நம்பியே வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.


இந்த ஊருக்கு அருகே வடகரை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த இரண்டு ஊரையும் இணைக்கும் பிரதானசாலையயானது சுமார் ஒருகிலோ மீட்டர் தூரமாகும். இவ்வழியாக அரசு பேரூந்துகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் இங்குள்ள மாணவ, மாணவிகளுக்கென 1–8ம் வகுப்பு வரை கல்வி பயில நடுநிலை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவ, மாணவிகள் உயர், மேல்நிலை கல்வி கற்க அருகே அமைந்துள்ள வடகரை பேரூராட்சில் அமைந்துள்ள பள்ளிக்கு சென்றுபடித்து வருகின்றனர்.


இங்குள்ள மக்கள் மருத்துவ தேவைக்காக வடகரையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர். மேலும் பொருட்கள் வாங்க –விற்க அனைவரும் பிரதானசாலையான இச்சாலையை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

பள்ளிக்கூடம் முடிந்து டியூசன் முடித்து வரும் மாணவ, மாணவிகளும் இவ்வழியாகத்தான் வந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவ்வாறு மிக முக்கியமான பிரதானசாலையில் போதுமான தெரு விளக்குகள் இல்லாததால் குடிமகன்களின் ஆதிக்கம் அகரித்துள்ளதால் இரவு நேரங்களில் ஆண்களும் பெண்களும் மாணவ, மாணவிகளும் இவ்வழியாக வர மிகவும் அச்சப்பட்டு பயணிக்க வேண்டிய சுழ்நிலையில் மிகுந்த வேதனையுடன் வந்து செல்கின்றனர்.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன்கருதி இரு ஊரையும் இணைக்கும் பிரதானசாலையில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Thanks : malaimalar

No comments:

Post a Comment