Monday, October 28, 2013

முகப்புத்தகத்தில் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டை நோக்கி நமது பக்கம் ..


நமது இந்த " ஐ லவ் கடையநல்லூர் " பக்கம் ஓராண்டுகளை வெற்றிகரமாக கடந்து இன்று தனது இரண்டாமாண்டில் அடி எடுத்து வைக்கிறது ... ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் பல...

Our "I Love Kadayanallur" page successfully completed his one year today ... Many thanks to all who supported ...




மெயின் பஜார் வாகன நெருக்கடி பிரச்சினை தீர்க்க ஓர் யோசனை ..



மெயின் பஜார் வாகன நெருக்கடி பிரச்சினை தீர்க்க ஓர் யோசனை 
அன்பிற்கினிய எனது கடையநல்லூர் வாசிகளே 
நமது மசூது தைக்கா பள்ளிகூடத்திலிருந்து தொடங்கி, மாவடிகால் வரை நீண்ட நெடிய மிக பெரிய கடை வீதியை கொண்டது தான் நமது மெயின் பஜார். இங்கே சமீப காலங்களில் அடிக்கடி வாகன நெருக்கடி ஏற்ப்பட்டு 
பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பல துயரத்திற்கு உள்ளாகிறார்கள்.
இந்த பிரச்சினையை தீர்த்திட மெயின் பஜாரை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என்று சில சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் இதை சம்பத்தப்பட்டவர்கள் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை, ஆதலால் அனைத்து சமூக மக்களும் ஒன்றினைந்து மெயின் பஜாரை ஒரு வழி பாதையாக மாற்றிட களத்தில் இறங்கி போராட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன். 
ஒரு வழி பாதையாக நடைமுறை படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய 
நடைமுறைகள், என் சிற்றறிவுக்கு தோன்றிய சில யோசனைகள்
• கிழக்கே உள்ள கிராமங்களிலிருந்து வரும் பேருந்துகள் பஜார் வழியாக வந்து பேருந்து நிலையத்தை அடைய வேண்டும், ஏனென்றால் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பஜாரில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ள இந்த முறை உபயோகமாக இருக்கும். 

• பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் காவல் நிலையத்தின் இடதுபுறம் உள்ள சாலை வழியாக சென்று மாவடிக்கால் அருகே உள்ள பாலத்தில் வலது புறம் திரும்பி மெயின் பஜாரில் இணைந்து கொள்ளலாம். 

• இதே நடைமுறையை பள்ளி, கல்லூரி வாகனங்களும், மற்ற சாதாரண 
வாகனங்களும் பின்பற்றுவதில் பிரச்சினை இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது
• இரு சக்கர வாகனங்களுக்கும், ஆட்டோக்களுக்கும் இதில் விதி விலக்கு கொடுக்க பட வேண்டும். ஏனென்றால் சில தனியார் மருத்துவ மனைகள் மெயின் பஜாரில் இயங்கி வருவதால். இங்கே வரும் நோயாளிகள் ஆட்டோகளிலேயே வருகிறார்கள் அவர்களுக்கு சிரமம் கொடுக்க பட வேண்டாம்.

• மேலும் கடைகளுக்கு சரக்கு கொண்டு வரும் கனரக வாகனங்களுக்கு 
இரவு நேரங்களில் மட்டுமே அனுமதி கொடுக்க பட வேண்டும்.

• வாகங்களை கண்காணிக்க மசூது தைக்கா பள்ளி அருகிலும், மாவடிகால் சந்திப்பிலும் ட்ராபிக் போலீஸ் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த நடைமுறைகளை கடைபிடித்தால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும் என்பதே என் கருத்து.
என் கருத்தில் ஏதாவது குறை இருந்தால் தெரியப்படுத்தவும். மேலும் வாசகர்களாகிய உங்களுக்கு இதை படிக்கும் உங்களுக்கு வேறு ஏதாவது அபிப்ராயங்கள் இருந்தாலும் தெரியபடுத்தவும்


Thanks : Mr. Seyan Ibrahim... 

Tuesday, October 1, 2013

ஹப்பா.. தென்காசி ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படுகிறது


தென்காசி ரெயில்வே மேம்பாலம் 10 நாட்களுக்குள் திறக்கப்படும் சரத்குமார் எம்.எல்.ஏ தகவல்...

தென்காசி ரெயில்வே மேம்பால பணி தொடங்கி சுமார் 3 ஆண்டுகள் ஆகின்றன. ரெயில்வே நிர்வாகம் மூலம் நடைபெற்ற பணி மிகவும் தாமதமாக நடந்தது. பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக சேவை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. ஆனால் பாலம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை.

இதுகுறித்து சரத்குமார் எம்.எல்.ஏ. விடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:–

தென்காசி ரெயில்வே மேம்பாலப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. பெயிண்டிங் பணியும் முடிந்துவிட்டது. கடந்த மாதம் தென்காசி வர்த்தக சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தனர். வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் தவிர்க்கப்பட்டது.

இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்க முதல்– அமைச்சர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளேன். இன்னும் 10 நாட்களுக்குள் முதல்– அமைச்சர் இதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பார். இவ்வாறு சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

கடையநல்லூர் வழியாக சென்னைக்கு புதிய ரெயில் ...


கடையநல்லூர் வழியாக சென்னைக்கு புதிய ரெயில் ராமசுப்பு எம்.பி., தகவல்...

இதுபற்றி அவர் கூறி இருப்பதாவது:–

நெல்லை பாராளுமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற தீபாவளி பண்டிகை முதல் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதாவது கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயில் வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம் வழியாக சென்னைக்கு இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு ராமசுப்பு எம்.பி., கூறினார்.