Thursday, July 2, 2015

கடையநல்லூர் பகுதியில் கிடப்பில் இருக்கும் குடிநீர் திட்டப்பணிகளை நிறைவேற்ற தி.மு.க. வலியுறுத்தல்



தி.மு.க. மகளிரணி முன்னாள் துணை அமைப்பாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான தமிழ்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடையநல்லூர் நகரில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது சுமார் 23.5 கோடி ரூபாய் நிதியில் தாமிரபரணி குடிநீர் திட்டபணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்தது. ஆனால் அந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது. எனவே மக்கள் நலனை கருத்தில்கொண்டு முடங்கி கிடக்கும் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

கடையநல்லூர் நகரில் தனியார் கட்டிடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களை சொந்த இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா அலுவலகம் நிரந்தரமாய் அமைத்திட தற்போதைய தாலுகா அலுவலகம் செயல்பட்டுவரும் தானிய கிட்டங்கியின் அருகில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம், தென்காசி மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அட்டக்குளம் எதிரேயுள்ள பாலூரணி, பேருந்து நிலையம் எதிரேயுள்ள கோவில் நிலம், பெரிய பள்ளிவாசலை ஒட்டியுள்ள கானாங்குளம் போன்ற பகுதிகளில் இடத்தை தேர்வு செய்யவேண்டும்.


மேலும் வாழ்வாதார குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ள கல்லாறு திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் முனைப்போடு செயல்பட வேண்டும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment