நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தூர்பாண்டியன் உடல் நலக்குறைவால் நேற்று சென்னை ஆஸ்பத்திரியில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம், அவரது சொந்த ஊரான செங்கோட்டைக்கு எடுத்து செல்லப்பட்டது.
நேற்றிரவு 12 மணியளவில் செங்கோட்டை சேர்வைகாரன் புதுத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
இதையடுத்து செந்தூர்பாண்டியன் உடலுக்கு அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, எடப்பாடி பழனிச்சாமி, காமராஜ், செல்லூர் ராஜூ, உதயகுமார், எம்.பி.க்கள் முத்துகருப்பன், விஜிலாசத்தியானந்த், பிரபாகரன், வசந்திமுருகேசன், சசிகலாபுஷ்பா, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், மைக்கேல்ராயப்பன், கடம்பூர் ராஜூ, நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி குழந்தைவேல், தென்காசி கோட்டாட்சியர் வெங்கடேசன், செங்கோட்டை தாசில்தார் சங்கரலிங்கம், தென்காசி தாசில்தார் சொர்ணராஜ் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சுந்தர்ராஜன், எம்.எல்.ஏ.க்கள் இசக்கிசுப்பையா, பச்சைமால் மற்றும் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், அமைப்பினர், பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்பு செந்தூர்பாண்டியனின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கற்குடியில் உள்ள அவரது தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
PC; Tenkasi Times


No comments:
Post a Comment