Saturday, February 23, 2013

மறந்துவிடாதீர்க ள்! நாளை பிப்ரவரி 24 - போலியோ சொட்டு மருந்து முகாம்!


மறந்துவிடாதீர்க ள்! நாளை பிப்ரவரி 24ம் தேதி தமிழகமெங்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிறு பிப்ரவரி 24ம் தேதி 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.குழந்தகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுங்கள். போலியோ இல்லாத உலகம் அமைப்போம்..

நான் காதலிக்கும் என் கடையநல்லூர்....




" சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரப் போல வருமா "

இந்த வரிகள் எவ்வளவு உணர்வுள்ளது  என்பது என்பது என்னைப்போன்று பணிகளுக்காக வெளியிடங்களில் இருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்...

நமதூரில் இல் பேர் வெளிநாடுகளில் தான் இருக்கின்றனர்,.. அவர்களுக்காக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்...

நான் என் பணிக்காக சென்னையில் தான் இருக்கிறேன் ( அதுவே ரொம்ப கஷ்டமா இருக்கு) சென்னையில் எங்கு போனையும் மனம் கடையநல்லூர்-ரைத் தேடாத நாட்களே இல்லை

என்னதான் பீச், பார்க் என்று இருந்தாலும் நமதூர் அட்டைக்குளம், பெரிய பஸ்டாண்டுக்கு ஈடாகாது...

என்ன மாப்ள சௌக்கியமா வெளியூர் ல இருந்து வந்துருக்க ஒரு கவனிப்பே இல்லை என்று அழைக்கும் நண்பனிடம்... பெரியதாக ஏதோ கேட்கிறான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே "வால" பெரிய பஸ்டாண்டு போவோம் ராஜா கடையில பஜ்ஜி வங்கி தால என்பான்... அந்தளவிற்கு பெரியபஸ்டான்டோடு ஒரு தொடர்பு..

சாயங்கால நேரம் அட்டைக்குள திண்டுகளில் உட்கார்ந்து காற்று வாங்குற சுகம் இருக்கே அப்பா.. என்னல மெரினா பீச்சு போல என சொல்லும் அளவிற்கு சொக்க வைக்கும் கடையநல்லூர் காற்று நமுடன் ராகம் பாடிக்கொண்டே...

சனி, ஞாயிறு அனால் போதும் ஏல..பெரியாதுக்கு வாரியால... கருப்பாநதிக்கு வாரியால..., என ரஹ்மத் ல "ரொட்டி, சால்னா" அதாங்க பரோட்டா வாங்கிட்டு  ஒரு ஒரு குரூப்-ஆ கிளம்பி அங்க ஒரே கும்மாளம், குதியாட்டம் தான்..அதுக்கு இணையாக எதையுமே சொல்ல முடியாது அவ்ளோ ஒரு சுகம்...

சாயங்காலம் ஆனா மேற்கே ரயில்வே ஸ்டேஷன் போய் மதுரை-செங்கோட்டை பாசஞ்சருடன் பேசிவிட்டு, பொதிகையை வழி அனுப்பிவிட்டு  பிளாட்பாரம் எங்கும் எங்கள் காலத்தடங்களைப் பதிப்போம்..

டீ, மிக்சர் வாங்கி தா மாப்ள னு நேஷனல்-க்கு ஒரு குரூப்பும் , அல்வா வாங்கித்தா மாப்ள னு மூக்கையா--க்கு ஒரு குரூப்பும் னு சாயங்காலம் 4 மணிக்கு மேல அந்தந்த கடைகள் களைகட்ட ஆரம்பிக்கும் ...

எனக்கு தெரிந்து சுற்று வட்டார பகுதியிலே அப்பவே DTS வந்து கலக்கினது எங்க மகாராஜா தான் 10 ரூ தான் டிக்கெட் .. என்னங்க சத்தியம் தியேட்டர்- னு தோணும்.... அவ்ளோ ஒரு இணக்கமான உறவு...

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்மஸ், பக்ரீத் னு எல்லா விழாக்களையும் எல்லோரும் சேர்ந்து தான் கொண்டாடுவோம் இது எங்க கடையநல்லூர்-ன் சமதுவதிர்க்கான அடையாளம்...

குறிப்பா காலையில 8 மணிக்கே கண் முழிக்கவே முடியாம முழிக்கும் எனக்கு ஏனோ... சென்னை ல இருந்து கடையநல்லூர் வரும் போது மட்டும் 4 மணிக்கு மேல தூக்கமே வராது அவ்ளோ ஒரு ஈர்ப்பு கடையநல்லூர் மேல..

இங்க வந்தா மட்டும் ஏனோ 24 மணி நேரம் கூட 1 மணி நேரம் மாதிரி சட்டென பறக்கும்... கடிகாரப் பிழையா இல்லை இல்லை... கடையநல்லூரின் களை...

கடையநல்லூர்- ஐ விட்டு மறுபடியும் பணிக்காக செல்லும் போது எங்கள் உடல் மட்டுமே பயணிக்கும் மனது அங்கேயே தங்கிவிடும்...

இந்தளவிற்கு எங்களைஎல்லாம் வசீகரித்திருக்கும் எங்கள் கடையநல்லூரைக்..

காதலித்தோம்... காதலிக்கிறோம்... காதலிப்போம்...

இப்ப சொல்லுங்க முதல் வரிக்கு ஈடு இணை ஏதும் உண்டா னு... நமது கடையநல்லூர் சொர்கத்துக்கும் மேல ல ...

மீளா நினைவலைகளுடன்  உங்கள் ஜி.உதய்.. ( udhaygeee@gmail.com & ourkadayanallur@gmail.com )

Monday, February 18, 2013

நமதூரின் அருகே தென்றல் தவழும் அழகிய குற்றாலம்

குற்றாலம் !!
தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டுருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறிவிடும். அந்நேரம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால் மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்கபடுவதில்லை.

குற்றாலத்தில் உள்ள அருவிகள்
குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.
பேரருவி ( MAIN FALLS ), இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு, மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தை தருகிறது.
சிற்றருவி ( CHITRARUVI ), இங்கு நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தான் செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு செல்ல முடியும்.
செண்பகாதேவி அருவி ( SHENBAGADEVI FALLS ) செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது. அங்கு செண்பகாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.
அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவி ( THENARUVI ) உள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.
ஐந்தருவி ( AINTHARUVI ) இவ்வனைத்திலும் மாறுபட்ட அருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.
இந்த அருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி ( PAZHATHOTTA ARUVI ), அல்லது விஐபி அருவி இருக்கிறது.
பழைய குற்றாலம் அருவி ( PAZHAYA COURTALLA ARUVI ) இரண்டு பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது. இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றி குளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும் திறக்கப்பட்டது.
புலி அருவி ( PUZHIARUVI ) செயற்கையாக உருவாக்கப்பட்டது. இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது
ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளது, ஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.


அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்
தெற்குமலை எஸ்டேட் - தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.
ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ள படகு சவாரி.
பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை
சிறு குழந்தை பூங்காக்கள்.


குற்றாலத்தின் சிறப்புகள்
குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்ல, தெய்வீகமான இடமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை, இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளது.
தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனது குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளர்.
மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் இந்து சமய பாரம்பரியபடி சங்கு வடிவம் உள்ளது சிறப்பு.



குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்
பேரருவியில் உள்ள திருகுற்றாலனாதர் கோவில்.சித்திரை மாதம் முழு நிலவின் போது பத்து நாள் சிறப்பு பிரார்த்தனை இங்கு நடைபெறும்.
பண்பொழியில் உள்ள திருமலைக்கோவில் - குற்றாலத்திலிருந்து இருந்து 8 கிமீ.
இலஞ்சியில் உள்ள குமரன்கோவில், குற்றாலத்திலிருந்து 1 கிமீ.
தென்காசியில் உள்ள காசிவிசுவநாதர்கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 6 கிமீ.
புளியரையில் உள்ள தக்ஷினாமூர்த்தி கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 12 கிமீ.
பாபநாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.
ஆரியன்கா ஐயப்பன்கோவில், குற்றாலத்திலிருந்து 35 கிமீ.




அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள்
பாலருவி - கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.
பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறு, குற்றாலத்திலிருந்து இருந்து 35 கிமீ.
அகஸ்தியர் அருவி - பாபநாசம் அருகே உள்ளது.
பாணத்தீர்த்தம் அருவி - பாபநாசம் அருகே உள்ளது.
பாபநாசம் (லோயர்) அணை - பாபநாசம் அருகே உள்ளது.
பாபநாசம் (உயர்), காரையார் அணை - பாபநாசம் அருகே உள்ளது.
சேர்வலார் அணை - பாபநாசம் அருகே உள்ளது.
மணிமுத்தாறு அணை - பாபநாசம் அருகே உள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் - பாபநாசம் அருகே உள்ளது.
மஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட் - பாபநாசம் அருகே உள்ளது. இவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடி வரை அமைந்துள்ளன.



குற்றாலத்துக்கு வருவது எப்படி
சாலை மூலமாக
சாலை வழியில் குற்றாலத்திலிருந்து பல்வேறு இடத்திற்கான தூரம்:
மதுரை: 160 கி.மீ.
திருநெல்வேலி: 59 கி.மீ
தென்காசி: 5 கி.மீ
செங்கோட்டை: 5 கி.மீ
மதுரை விமான நிலையத்தில் இருந்து: 160 கி.மீ
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து: 190 கி.மீ

தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து குற்றாலம், பஸ் போக்குவரத்து மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து செங்கோட்டை வரும் பேருந்துகளாலும், திருநெல்வேலியில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டை வரும் பேருந்துகளாலும் குற்றாலத்தை அடையலாம். மேலும் கேரளா மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் மூலவும் குற்றாலத்தை அடையலாம்.

தொடர் வண்டி மூலமாக
குற்றாலத்தில் தொடர் வண்டி நிலையம் இல்லை, ஆனால் செங்கோட்டை மற்றும் தென்காசி நிலையத்தில் இருந்து இருபது நிமிடங்களில் குற்றாலத்தை அடையலாம். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொடர் வண்டிகள்.
பொதிகை எக்ஸ்பிரஸ்: செங்கோட்டை - சென்னை, சென்னை - செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை - மதுரை, மதுரை - செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை - திருநெல்வேலி, திருநெல்வேலி - செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை - கொல்லம், கொல்லம் - செங்கோட்டை

சில நேரங்களில் சென்னை, ஈரோடு மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு வண்டிகள் தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன.





Thanks : http://har1sh.blogspot.com/ & http://sugadevnarayanan.blogspot.com

Sunday, February 17, 2013

எங்க ஊருடா .. இது தங்க ஊரு டா...



நமது கடையநல்லூர் பெயருக்கேற்றது போலவே நல்ல ஊரும் கூட...!!!

"கடையநல்லூர்- சுத்துன கழுதை  கூட ஊரை விட்டு போகாது னு சொல்வாங்க"

இப்ப நம்ம ஊரைப் சுற்றி பார்போம்...

நமதூரின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையும் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் கருப்பாநதி அணையும் 3 கிலோ மீட்டர் தொலைவில் பெரியார் ஆற்று படுகையும் உள்ளது. இவ்வாற்றின் மூலம் தான் கடையநல்லூர் முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது...

நமதூரைப் பொறுத்தவரை மேற்கு பகுதியை "பேட்டை" என்று அழைப்போம் இங்கு பெரும்பான்மை "முஸ்லீம்கள்"..

கிழக்கு பகுதியை "மாவடிக்கால்" என்று அழைப்போம் இங்கு பெரும்பான்மை இனத்தவர்கள் நாயக்கர்கள்.. தெற்கு பகுதியை "பஜார்" என்றும் "தெரு" என்றும் அழைப்போம் இங்கும் முஸ்லீம்கள் தான் அதிகம்..


மத்தியப் பகுதியை "முத்துக்கிருஷ்ணாபுரம்" என்கிறோம் இங்கு "சேனைத்தலைவர்" சமுதாய மக்கள் தான்...


வடக்கு பகுதி "கிருஷ்ணாபுரம்" இங்கு தேவர் இன மக்களும் , தேவேந்திர குல மக்களும் அதிகம்...

அட்டக்குளத்திற்கு மேற்கே அருந்ததியர் சமுதாயத்தினரும் கிறிஸ்தவ மக்களும் ஏராளம்..

மேலக் கடையநல்லூர்- ஐ பொறுத்தவரை அனைத்து சமுதாய மக்களும் சமபங்கு வகிக்கின்றனர். அக்ரஹாரம் , தேரடி வீதிக்கு புகழ் பெற்றதும் இதுதான்...



நமது நல்லூரில் இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நமதூர் அனைத்திலும் தன்னிறைவு பெற்றுள்ளது...

நமதூரின் சுவாரசியங்கள் அடுத்த பதிவில்...

தொடர்புக்கு  ourkadayanallur@gmail.com


-G.Udhay..




Tuesday, February 12, 2013

கடையநல்லூரில் வேலைவாய்ப்பு முகாம்!



கடையநல்லூர் அச்சம்பட்டியில் உள்ள எவரெஸ்ட்
கல்லுரி சார்பாக வேலை வாய்ப்பு முகாம் 11-2-13
அன்று காலை 10:00 மணி முதல் நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு நிறுவனங்கள்
கலந்து கொண்டு தாங்களுக்கு தேவையான தகுதியான
நபர்களை தேர்வு செய்ய உள்ளது. 

எனவே +2, ITI, DIPLOMA Eng படித்து முடித்தவர்கள்
நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். குறிப்பு : நேர்முக தேர்வில் கலந்துகொள்ளும் அல்லது கலந்து கொண்டு தேர்வு செய்யப்படும் நபர்கள்
தாங்கள் தேர்வாகிய நிறுவனத்தின்
தகுதியை நன்கு ஆய்வு செய்து கொண்டு நிறுவனத்தை தேர்வு
செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.

Thanks THE ERA STREET