Saturday, June 20, 2015

குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் கவனிக்க..



* குற்றாலத்தில் உங்களுக்கு போலீஸ் உதவி தேவைப்பட்டாலோ, புகார் தெரிவிக்க வேண்டும் என்றாலோ 99527 40740 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். 'வாட்ஸ் அப்'பும் பண்ணலாம்.

* வேறெந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்தாண்டில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு கூடுதலாக போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. குற்றாலம் முழுதும் ஐம்பது கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அருவிகளில் குளிக்க வருபவர்களைக் கண்டறிவதற்கான கருவி வரவழைக்கப்படவுள்ளது. பெண்களை கேலி செய்பவர்கள், அனுமதியின்று செல்போனில் படம் பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. .


* அருவிகளில் சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய், எண்ணெய் பயன்படுத்துவதற்கான தடை இந்தாண்டும் நீடிக்கிறது. மீறிப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். குற்றால அருவி நீரில் இயற்கையாகவே மூலிகைத் தன்மையும், ஆக்ஸிஜனும் நிறைந்திருப்பதால் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கவேண்டிய அவசியமில்லை.

* குரங்குகளுக்கு தின்பண்டம் போன்ற உணவுகள் எதுவும் கொடுக்க வேண்டாம். பைக் முன் சீட் கவர்களில் தின்பண்டங்கள் மற்றும் வேறெந்த பொருட்களையும் வைக்காதீர்கள். குரங்குகள் பைக் சீட்டுகளை கிழித்து சேதப்படுத்தி விடக்கூடும்.

* நகைகள் அணிந்து குளிக்காதீர்கள். குழந்தைகள், நகைகள், விலையுர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

* குரங்குகள் சாலைகளில் அங்குமிங்கும் திரியக்கூடும் என்பதால் குற்றாலத்திற்குள் நுழையும் வாகனங்கள் மெதுவாக சென்றுவர வேண்டும்.

* ஆண்கள் ஜட்டி மட்டும் அணிந்தும், பெண்கள் உள்ளாடை மட்டும் அணிந்தும் அருவிகளில் குளிக்கக்கூடாது. பெண்கள் திறந்தவெளியில் உடை மாற்றக்கூடாது.

* சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்; பாதுகாப்பாக குளியுங்கள்; சீசனை அனுபவியுங்கள்.

Thanks ; I Love Tenkasi/Cutrallam 

No comments:

Post a Comment