Monday, June 8, 2015

நெல்லையின் புகழை கொடிகட்டிப்பறக்கச் செய்த நெல்லை கீதம் இசை வெளியீட்டு விழா: ரசிகர்கள் அமோக வரவேற்பு..



நெல்லையின் புகழை கொடிகட்டிப்பறக்கச் செய்த நெல்லை கீதம் இசை வெளியீட்டு விழா: ரசிகர்கள் அமோக வரவேற்பு

நெல்லையின் மங்காத புகழை மகுடமேற்றும் விதமாக நெல்லைகீதம் இசை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இதன் வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



நெல்லையின் பெருமையைப்பற்றி டான்ஸ் மாஸ்டரும் நெல்லையைச் சேர்ந்தவருமான தங்கராஜ் எடுத்த வீடியோ வெளியீட்டு விழா இன்று நெல்லை ராம்முத்துராம் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில்

தியேட்டர் அதிபர் மற்றும் நெல்லை மயூரி டி.வி.வியின் அதிபர் ஆறுமுகநயினார் ஆகியோர் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டனர். பின்னர் இது ரசிகர்களுக்காக ராம் தியேட்டரில்

வெளியிடப்பட்டது. இதை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து பாராட்டு தெரிவித்தனர்.

நெல்லையின் பெருமையை எடுத்துச் சொல்லும் இந்த பாடல் குறித்து ரசிகர்கள் சிலர் கூறியதாவது:
நெல்லை பெயரைக் கேட்டாலே கரும்பை கடித்த ருசிதான் நமது நாவினில் தென்படும். காரணம் உலக வரலாற்றில் நெல்லைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அனைத்து துறைகளிலும்

நெல்லையைச்சேர்ந்தவர்கள் இல்லாமல் இருக்காது. வீரத்துக்கு பெயர்போன பூமி என்றாலும் அது நெல்லைதான். பாசத்துக்கு பெயர் பெற்ற பூமி என்றாலும் அது நெல்லைதான். மற்ற எந்த ஊரில்

பிறந்ததைக்காட்டிலும், நான் நெல்லைக்காரன்டா… என்று கூறும்போது அவனுக்கே ஒரு வீரம் தலைதெறிக்க வரும். இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.

அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நெல்லை பூமியைப்பற்றி ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த அமெரிக்க படத்தில் கூட நாம் காணாத பிரமாண்டத்தை (நாங்கள் கூறுவது எங்கள்

மண்ணின் பெருமையை) ஒரே ஒரு பாட்டில் கொண்டு வந்து சிறப்பு செய்த நெல்லையின் மன்னர் தங்கராஜூக்கு அனைவரும் நன்றி தெரிவிக்கலாம். அவ்வளவு சிறப்பாக நெல்லையின் புகழை

உலக மக்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறப்புகள் வாய்ந்த தாமிரபரணியின் புகழ், சொரிமுத்தையனார் கோவில், நெல்லையப்பர் கோவில், முண்டந்துறை, பாபநாசம், குற்றாலம் உள்பட மாவட்டத்தில் உள்ள

பல்வேறு சிறப்புகளை ஒரே ஒரு பாட்டால் பறைசாற்றியிருக்கும் டைரக்டர் தங்கராஜ் மிகவும் போற்றுதலுக்குறியவராவார். இந்த பாடலைப்பார்த்ததும், 100 சினிமா படங்களை பார்த்த உணர்வு

ஏற்படுகிறது. இவ்வறு அவர்கள் கூறினர்.

Thanks : Makka News

No comments:

Post a Comment