Tuesday, June 2, 2015

உதயமானது கடையநல்லூர் தாலுகா...

02-06-2015

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா விடியோ கான்பரன்சிங் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்... விபரங்கள் கீழே..



கடந்தாண்டு சட்டசபையில் 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி, சங்கரன்கோயில், சிவகிரி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து கடையநல்லூரை புதிய வருவாய் வட்டமாக அறிவித்தார் அதனை தொடர்ந்து தாலூக அலுவலகம் தொடங்குவற்கான தற்காலிகமா கடையநல்லூர் மின்வாரியம் எதிரில் உள்ள அரசு ஒழங்குமுறை விற்பனை கூடம் தேர்வு செய்யப்பட்டது இதனை இன்று பகல்1 மணிக்கு தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், கடையநல்லூர் வட்டாச்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன்அவர்கள் அலுவலகத்தின் இனிப்பு வழங்கி பணியினை தொடங்கி வைத்தார் இதில் நாடாளுமன்றம் உறுப்பினர் வசந்திமுருகேசன்,பிரபாகரன் வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையாபாண்டியன் கோட்டாச்சியர்
வெங்கடேஷ்,தென்காசி வட்டாச்சியர் சொர்னராஜ், கடையநல்லுர் வட்டாச்சியர் சுதந்தராஜ் துணை வட்டாச்சியர் ஆதிநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.




படம்.,செய்தி குறிச்சிசுலைமான்.

No comments:

Post a Comment