Thursday, June 18, 2015

கடையநல்லூர் தினசரி மார்கெட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..



கடையநல்லூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்கெட் நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்தது இதை ஆண்டு தோறும் நகராட்சி சார்பில் ஏலம் விடுவது வழக்கம் மார்கெட்டைஏலம் எடுப்பவர்கள் அதை தனியாருக்கு வட்டிகடைக்கும்,சலுன்கடைக்கும்.இட்டிலிகடைகளுக்கு வாடைகைக்கு கொடுத்துவிட்டு பெண்கள் பள்ளிக்கூடம் கீழ் பகுதியிலிருந்து முப்பிடாதிஅம்மன் கோவில்வரை ஆக்கிரமித்து கடை நடத்துவதால் அப்பகுதியில் வசிக்கும் தாழ்தப்பட்ட ஆதிதிராவிடர்கள்,முஸ்லிம்கள் தனியார் மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லுபவர்கள் கடந்ந இருபதுஆண்டுகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்..



 இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் அப்பகுதி மக்கள் நகராட்சியை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர் இதன் எதிரொலியாக 21-11-14 அன்று தென்கசாசி சப்கலெக்டர் தலைமையில் சமாதானகூட்டம் நடைபெற்றது இதில் நகராட்சி சார்பில் குத்தகை காலம் 31-3-15வரை உள்ளதால் ஆக்ரமிப்புகள் அகற்றுதல் வேண்டாம் எனகேட்டு கொண்டதால் அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபாதை கடைவைக்க. சமாதாக்கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டது.



இந்நிலையில் ஆக்கிரமித்து கடைகட்டிய ஒன்பது கடைகாரர்கள் மட்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றதால் அதை தவிர்த்து ஆக்கிரமித்த அனைத்து கடைகளையும் நகராட்சி கமிஷ்னர் அய்யூப்கான் மேர்பார்வையில் காவல் துறை ஆய்வாளர் திரு சாம்சன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பி அகற்றப்பட்டது .



மீண்டும் ஆக்கிமிப்பு செய்யாமல் இருப்பதற்காக அப்பகுதியில் இயற்கை ஆர்வளர் திரு சாம்சன் மரக்கன்றுகளை நட்டார்.




படங்கள் & செய்தி  : குறிச்சி சுலைமான் 

No comments:

Post a Comment