Saturday, February 15, 2014

நமது கடையநல்லூர்.. சில நினைவுகள்..3






இன்று நம்முடன் அதிக தொடர்பில் இருக்கும் நமது ஊர் பேருந்துகள் பற்றி பார்க்கலாம்..



7B,12, ஜப்பான் , கோமதி அம்பிகை ,எம்.ஆர்.கோபாலன் , இதெல்லாம் நம்ம அடிகடி உச்சரிக்கிற பெயரு.. இதை நம்ம உயிரற்ற ஒரு பொருளா பார்க்காம நம்மோட வாழ்ற ஒரு உயிராத்தான் பாக்றோம். எப்டின்னு கேக்றீங்களா.. ? நம்ம பஸ் கரெக்ட் டைம் க்கு வரலேனாலோ நம்ம லேட் ஆ போனாலோ ... நம்ம அங்க இருக்குறவங்க கிட்ட ஜப்பான் போய்ட்டானா , கோபாலன் போய்ட்டானா னு தான் கேப்போம் .. அவ்ளோ ஒரு பாசப் பிணைப்பு .. நம்ம ஊருக்கு பல பேருந்துகள் வந்து சென்றாலும் மேலே சொன்ன பேருந்துகள் தான் மிக முக்கியமானவை காரணம் நிறைய சொல்லிட்டே போகலாம்... எனக்கு விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே இந்த பஸ் லாம் இருக்கு ..



ஒவ்வொருத்தருக்கும் ஓவ்வொரு விதத்துல இந்த பேருந்துகளோடு தொடர்பிருக்கும்.. ஜப்பான் பஸ்ல தான் காசிதர்மம் , வடகரை , வாவா நகரம், பைம்பொழில் போன்ற ஊர்களுக்கு பயன் படுத்துவோம் ... இந்த பஸ்ல பைசாவும் கம்மி சீக்கிரமாவும் செங்கோட்டைக்கு போய்டலாம்... அடுத்து 7ஆம் நம்பர் பஸ் இது இடைகால் , ஊர்மேலழகியான், கோவிலூர் , சாம்பவர் வடகரை , சுரண்டை வழியாக வீ.கே.புதூர் போகும் .. இது பாஸ் பஸ் அதனால இடைகாலில் படிக்கும் மாணவர்கள் பெரும்வாரியாக இந்த பேருந்துகளைப் பயன் படுத்தி இருப்பார்கள் .. அடுத்து கோமதி அம்பிகை இது நம்ம ஆஸ்பித்திரி ஸ்டாப் , முத்தாரம்மன் கோயில் ஸ்டாப், மாவடிக்கால் , மலைக்கோவில் , வீரசிகாமணி வழியாக சங்கரன்கோவில் செல்லும் .. இதை பெரும்பாலும் மக்கள் சங்கரநாராயணன் கோவில்லுக்கு செல்வதற்கும் , அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும் பயன் படுத்தி இருப்பார்கள்... அடுத்து எம்.ஆர்.கோபாலன் இது சொக்கம்பட்டி , புளியங்குடி , சங்கரன்கோயில் வழியாக கோவில்ப்பட்டி வரை செல்லும் ... இதையும் மக்கள் அதிகம் பயன்படுத்துவர் ... இப்படி படிப்பதற்கு, தொழிலுக்கு, கோவிலுக்கு, உறவினர்களை பார்பதற்கு பயன்பட்ட நமது தோழமைப் பேருந்துகள் காதலைக் கற்றுத் தரவும் மறக்கவில்லை ... இன்றும் அந்த பேருந்துகளின் இருக்கை பின்புறம் நமக்கு விருப்பமானவர்களின் பெயர்களை எழுதி இருப்பதை காணலாம்...



இந்த பஸ்களோட ஒரே ஒரு சிக்கல் என்னனா எதாவது முக்கிய நிகழ்சிகள் வந்தால் இந்த பேருந்துகளை அங்கே திருப்பி விட்டுடுவாங்க .. அப்புறம் நமக்கு தண்ணி தான்... எடுத்துக்காட்டாக குற்றாலம் சீசன் க்கு குற்றாலம் ஸ்பெஷல் , கார்த்திகைக்கு திருமலைக் கோவில் ஸ்பெஷல் ... இப்படி பல...





இந்த பேருந்துகள் உங்களின் வாழ்கையில் ஏற்படுத்திய நினைவுகள் எது ... பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுடன்....







நினைவுகள் தொடரும்..

No comments:

Post a Comment