Saturday, February 22, 2014

பிப்ரவரி 24 முதல் பொதிகை ரயிலின் நேரம் மாற்றம் ..



நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம் நமது பொதிகை ரயிலின் நேர மாற்றத்தைப் பற்றி... நாளை மறுநாள் முதல் அது அமலுக்கு வருகிறது ...

தெற்கு ரயில்வே அறிவித்தபடி, சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேர மாற்றம், இரு மார்க்கங்களிலும் பிப்.24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து ரயில்களை யும் இயக்க ஏதுவாக, சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே டிச.27ம் தேதி அறிவித்திருந்தது. அதன்படி பிப்.24ம் தேதி முதல் இந்த ரயில்கள் சென்னையில் இருந்து புறப்படும், வந்து சேரும் நேர மாற்றம் அமலுக்கு வருகிறது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 8.10 மணிக்கு புறப்படும், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் பிப்.24ம் தேதி முதல் இரவு 8.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் செங்கோட்டைக்கு காலை 8.20 மணிக்கு பதில் காலை 9 மணிக்கு போய்ச்சேரும். அதேபோல் செங்கோட்டையில் இருந்து, தினமும் இரவு 7 மணிக்கு பதிலாக பிப்.24ம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

அதனால் சென்னை எழும்பூருக்கு, காலை 7.05க்கு பதிலாக காலை 6.40 மணிக்கு வந்துச் சேரும். இந்த நேர மாற்றத்தினால், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நிற்கும் அனைத்து ரயில்நிலையங்களிலும் நின்று, புறப்படும் நேரம் மாறும். சென்னை எழும்பூரில் இருந்து தினமும் 8.50 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், பிப்.24ம் தேதி முதல் இரவு 8.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருநெல்வேலிக்கு காலை 8.35 மணிக்கு பதிலாக காலை 8 மணிக்கு போய்ச்சேரும். அதேபோல் திருநெல்வேலியில் இருந்து தினமும் இரவு 6.50 மணிக்கு புறப்படும், நெல்லை எக்ஸ்பிரஸ் பிப்.24ம் தேதி முதல் மாலை 7.25 மணிக்கு புறப்படும்.

நன்றி : ினகரன்
புகைப்படம் : அன்வர்

No comments:

Post a Comment