Thursday, January 23, 2014

வாருங்கள் ... பாதுகாப்போம் குற்றாலத்தை ...

பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை அன்று, பேஸ்புக் நண்பர்களை ஒன்றிணைத்து, குற்றாலம் பகுதிகளில் காணப்படும் பிளாஸ்டி கழிவுகளை அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அநேக நண்பர்கள் இப்பணியில் ஈடுபட ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது. திட்டமிட்டபடி இப்பணி வெற்றியடைந்தால், தென்காசி தமிழகத்திற்கே முன்மாதிரியாகத் திகழும். குறைந்தது 100 பேர் களப்பணி ஆற்ற தேவைப்படும். ஐந்து மணி நேரம் களப்பணி இருக்கும். இந்தப் புனித பணியில் தவறாமல் பங்கேற்க விரும்புவர்கள் மட்டும் 77087 18951 என்ற எண்ணுக்கு உங்கள் பெயர் மற்றும் ஊரை SMS அனுப்பி வையுங்கள். 

இப்பணியின் ஒருங்கிணைப்பாளார்களாக, 'புதிய தலைமுறை' பத்திரிகையாளார் சின்னதுரை, பட்டதாரி இளைஞர்களான யேசுராஜ் மற்றும் ஆக்னஸ் பொன்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குற்றாலம் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அதைப் பாதுகாப்பது நமது கடமை. வாருங்கள். இனி ஒரு விதி செய்வோம். இதை அனைவரும் Share செய்யுங்கள்.

No comments:

Post a Comment