"
சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரப் போல வருமா "
இந்த வரிகள் எவ்வளவு உணர்வுள்ளது என்பது என்பது என்னைப்போன்று பணிகளுக்காக வெளியிடங்களில் இருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும்...
நமதூரில் இல் பேர் வெளிநாடுகளில் தான் இருக்கின்றனர்,.. அவர்களுக்காக இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்...
நான் என் பணிக்காக சென்னையில் தான் இருக்கிறேன்
( அதுவே ரொம்ப கஷ்டமா இருக்கு) சென்னையில் எங்கு போனையும் மனம் கடையநல்லூர்-ரைத் தேடாத
நாட்களே இல்லை
என்னதான் பீச், பார்க் என்று இருந்தாலும் நமதூர்
அட்டைக்குளம், பெரிய பஸ்டாண்டுக்கு ஈடாகாது...
என்ன மாப்ள சௌக்கியமா வெளியூர் ல இருந்து வந்துருக்க
ஒரு கவனிப்பே இல்லை என்று அழைக்கும் நண்பனிடம்... பெரியதாக ஏதோ கேட்கிறான் என்று மனதிற்குள்
நினைத்துக் கொண்டிருக்கும் போதே "வால" பெரிய பஸ்டாண்டு போவோம் ராஜா கடையில
பஜ்ஜி வங்கி தால என்பான்... அந்தளவிற்கு பெரியபஸ்டான்டோடு ஒரு தொடர்பு..
சாயங்கால நேரம் அட்டைக்குள திண்டுகளில் உட்கார்ந்து
காற்று வாங்குற சுகம் இருக்கே அப்பா.. என்னல மெரினா பீச்சு போல என சொல்லும் அளவிற்கு
சொக்க வைக்கும் கடையநல்லூர் காற்று நமுடன் ராகம் பாடிக்கொண்டே...
சனி, ஞாயிறு அனால் போதும் ஏல..பெரியாதுக்கு வாரியால...
கருப்பாநதிக்கு வாரியால..., என ரஹ்மத் ல "ரொட்டி, சால்னா" அதாங்க பரோட்டா
வாங்கிட்டு ஒரு ஒரு குரூப்-ஆ கிளம்பி அங்க
ஒரே கும்மாளம், குதியாட்டம் தான்..அதுக்கு இணையாக எதையுமே சொல்ல முடியாது அவ்ளோ ஒரு
சுகம்...
சாயங்காலம் ஆனா மேற்கே ரயில்வே ஸ்டேஷன் போய் மதுரை-செங்கோட்டை
பாசஞ்சருடன் பேசிவிட்டு, பொதிகையை வழி அனுப்பிவிட்டு பிளாட்பாரம் எங்கும் எங்கள் காலத்தடங்களைப் பதிப்போம்..
டீ, மிக்சர் வாங்கி தா மாப்ள னு நேஷனல்-க்கு ஒரு
குரூப்பும் , அல்வா வாங்கித்தா மாப்ள னு மூக்கையா--க்கு ஒரு குரூப்பும் னு சாயங்காலம்
4 மணிக்கு மேல அந்தந்த கடைகள் களைகட்ட ஆரம்பிக்கும் ...
எனக்கு தெரிந்து சுற்று வட்டார பகுதியிலே அப்பவே
DTS வந்து கலக்கினது எங்க மகாராஜா தான் 10 ரூ தான் டிக்கெட் .. என்னங்க சத்தியம் தியேட்டர்-
னு தோணும்.... அவ்ளோ ஒரு இணக்கமான உறவு...
தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்மஸ், பக்ரீத்
னு எல்லா விழாக்களையும் எல்லோரும் சேர்ந்து தான் கொண்டாடுவோம் இது எங்க கடையநல்லூர்-ன்
சமதுவதிர்க்கான அடையாளம்...
குறிப்பா காலையில 8 மணிக்கே கண் முழிக்கவே முடியாம
முழிக்கும் எனக்கு ஏனோ... சென்னை ல இருந்து கடையநல்லூர் வரும் போது மட்டும் 4 மணிக்கு
மேல தூக்கமே வராது அவ்ளோ ஒரு ஈர்ப்பு கடையநல்லூர் மேல..
இங்க வந்தா மட்டும் ஏனோ 24 மணி நேரம் கூட 1 மணி
நேரம் மாதிரி சட்டென பறக்கும்... கடிகாரப் பிழையா இல்லை இல்லை... கடையநல்லூரின் களை...
கடையநல்லூர்- ஐ விட்டு மறுபடியும் பணிக்காக செல்லும்
போது எங்கள் உடல் மட்டுமே பயணிக்கும் மனது அங்கேயே தங்கிவிடும்...
இந்தளவிற்கு எங்களைஎல்லாம் வசீகரித்திருக்கும் எங்கள்
கடையநல்லூரைக்..
காதலித்தோம்... காதலிக்கிறோம்... காதலிப்போம்...
இப்ப சொல்லுங்க முதல் வரிக்கு ஈடு இணை ஏதும் உண்டா
னு... நமது கடையநல்லூர் சொர்கத்துக்கும் மேல ல ...
மீளா நினைவலைகளுடன் உங்கள் ஜி.உதய்.. ( udhaygeee@gmail.com & ourkadayanallur@gmail.com )

No comments:
Post a Comment