Tuesday, October 1, 2013

ஹப்பா.. தென்காசி ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படுகிறது


தென்காசி ரெயில்வே மேம்பாலம் 10 நாட்களுக்குள் திறக்கப்படும் சரத்குமார் எம்.எல்.ஏ தகவல்...

தென்காசி ரெயில்வே மேம்பால பணி தொடங்கி சுமார் 3 ஆண்டுகள் ஆகின்றன. ரெயில்வே நிர்வாகம் மூலம் நடைபெற்ற பணி மிகவும் தாமதமாக நடந்தது. பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக சேவை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. ஆனால் பாலம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை.

இதுகுறித்து சரத்குமார் எம்.எல்.ஏ. விடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:–

தென்காசி ரெயில்வே மேம்பாலப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. பெயிண்டிங் பணியும் முடிந்துவிட்டது. கடந்த மாதம் தென்காசி வர்த்தக சங்கத்தினர் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து இருந்தனர். வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் தவிர்க்கப்பட்டது.

இந்த பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்க முதல்– அமைச்சர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்து உள்ளேன். இன்னும் 10 நாட்களுக்குள் முதல்– அமைச்சர் இதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பார். இவ்வாறு சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.

No comments:

Post a Comment